ஆலங்குடி பகுதியில் குடும்ப பொருளாதார சூழ்நிலையால் பள்ளிப்படிப்போடு முடிந்துவிடும் கல்வி வாழ்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2019

ஆலங்குடி பகுதியில் குடும்ப பொருளாதார சூழ்நிலையால் பள்ளிப்படிப்போடு முடிந்துவிடும் கல்வி வாழ்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஆலங்குடி பகுதியில் பள்ளி படிக்கும் மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக பள்ளியோடு கல்வி வாழ்க்கை முடிந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கிராமப்புற மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் என தனி மாவட்டமாக உதயமானபோது, ஆலங்குடி தாலுகா உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஆலங்குடி தாலுகா அதிக அளவு பரப்பளவைக்கொண்ட தாலுகாவாக திகழ்ந்தது. காலப்போக்கில் இத்தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் அதிக அளவில் இருந்ததால், ஆலங்குடி தாலுகாவிலிருந்து கறம்பக்குடி தாலுகா கடந்த 2009-ம் ஆண்டு தனி தாலுகாவாக 50 வருவாய் கிராமங்கங்களுடன் பிரிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மருதன்கோன்விடுதியில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது.
இந்நிலையில், ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்டு 73 வருவாய் கிராமங்கள் உள்ளது. மேலும், ஆலங்குடி, கீரமங்கலம் என்ற 2 பேரூராட்சிகள் உள்ளது. ஆலங்குடி தாலுகாவைச் சுற்றிலும் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு சார்பில் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, துவக்க பள்ளிகள் என அதிகளவில் உள்ளன. ஆனால், இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்ப இப்பகுதியில் அரசு சார்பில் இதுவரை எந்தவிதமான கலைக்கல்லூரியோ, தொழில்நுட்பக் கல்லூரியோ ஏற்படுத்தவில்லை என்பது தான் கவலைக்குரிய விஷயம். இதனால், தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாததால் இப்பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பலர் திருச்சி, சென்னை, திருப்பூர், கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இளம் வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பணம் சம்பாதிப்பதற்காக வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆலங்குடி தாலுகா உட்பட்ட கிராமப்புற மாணவர்கள் மேல்நிலை கல்வியை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடர வேண்டுமானால் இங்கிருந்து சென்று வர சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரிகளுக்கு தான் செல்ல வேண்டும். மேலும், பேருந்துகளில் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளதால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமப்புற மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆலங்குடி பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரமாக இருந்துவந்த விவசாய பயிர்கள் நாசமானது. மேலும், பருவமழை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், மழை பொய்த்துப்போனதால், கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால், விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்ற நிலையில், தங்கள் குழந்தைகளின் பள்ளிப்படிப்பிற்கு கூட செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், ஆலங்குடி பகுதியில் அதிக அளவில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பிற்காக புதுக்கோட்டைக்குதான் செல்ல வேண்டும். அப்படி செல்லும் மாணவர்கள், பொருளாதார நெருக்கடியால் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே கிராமங்கள் அதிக அளவில் உள்ள பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் உள்ள ஆலங்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். இதனால் இப்பகுதி மாணவர்கள் தொடர்ந்து கல்லூரியில் பயில ஏதுவாக இருப்பதுடன் கிராமப்புற கல்வியும் மேம்பட வாய்ப்பாக அமையும். இவ்வாறு கூறினர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews