தமிழகம் முழுவதும் 22 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

தமிழகம் முழுவதும் 22 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் (டோல்கேட்) உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 22 சுங்க சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை - வானகரம், சூரப்பட்டு, காஞ்சிபுரம் - பரனுார், பெரும்புதுார், சென்னசமுத்திரம்; திருவள்ளூர் - பட்டரை பெரும்புதுார், எஸ்.வி.புரம்; திண்டிவனம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதேபோல, மதுரை - கப்பலுார், பூதக்குடி, திருச்சி - சிட்டம்பட்டி, விருதுநகர் - எட்டூர்வட்டம், நாங்குநேரி, கோவை - கன்னியூர்; சிவகங்கை - லெட்சுமணப்பட்டி, லெம்பாலக்குடி, செண்பகம்பேட்டை, வேலுார் - பள்ளிக்கொண்டா, துாத்துக்குடி - வாகைகுளம், சாலைபுதுார் ஆகிய 22 சுங்கச்சாவடிகளிலும், கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இவற்றில், ரூ.5 முதல் ரூ.15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி 31 கி.மீ நீளமுள்ள சாலை கொண்ட பட்டரை பெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு (ரூ.30) கட்டணம் உயரவில்லை. இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினிபஸ் ரூ.45லிருந்து ரூ.50 ஆகவும், லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.95லிருந்து ரூ.100ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு ரூ.150லிருந்து ரூ.160 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.185லிருந்து ரூ.195 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும், எஸ்.விபுரம் சுங்சாவடிக்கு ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.65லிருந்து ரூ.70 ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினிபஸ் ரூ.100லிருந்து ரூ.105 ஆகவும், லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.210லிருந்து ரூ.215 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு ரூ.320லிருந்து ரூ.335 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.405லிருந்து ரூ.425 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த சுங்க கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு காரணமாக சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுங்க கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பஸ்களின் கட்டணமும் உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 490 சுங்கசாவடிகள் உள்ளது. இதில், தமிழகத்தை பொறுத்தவரை 44 சுங்கசாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதில், குறைந்தபட்சம் ரூ.5 வரை அதிகபட்சமாக ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது’ என்றார். மேலும், இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘சுங்கச்சாவடிகள் தங்கள் கட்டுபாட்டில் உள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. இதனால், தேசியநெடுஞ்சாலைகளும், கிராமச்சாலைகளை விட மோசமான நிலையில்தான் உள்ளன. ஆனால், அந்த சாலைகளின் பராமரிப்பு பணி என்று கூறி ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாறி, மாறி உயர்த்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இது போன்று கட்டணத்தை உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews