👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
(S.Harinarayanan)
வண்ண விளக்குகள் வசீகர மானவை. கண்களை கவர்ந்திழுக் கும். பலரும் விரும்புவதால் வண்ண விளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக் கப்படுகிறது. குறைந்த பட்சம் ‘ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.
அறிவிப்புப் பலகைகள், பெரிய கடைகள், கடிகாரங்கள், சிக்னல்கள் (Signals), ஃபிரேம் (Frame) செய்யப்பட்ட படங்கள் ஆகியவற்றில் மின்மினிப்பூச்சி ஒளி போல அணைந்து அணைந்து ஒளிரும் விளக்குகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த விளக்குகள் 'ஒளி உமிழ் இருமுனைய விளக்கு( Light- Emitting- Diode Lamp) எனப்படும். சுருக்கமாக, எல்ஈடி - LED விளக்கு.மிகக் குறைந்த மின்னோட்டத்தில் இவற்றை ஒளிரச் செய்யலாம். இந்த பல்புகளின் ஒரு முனையில் கண்ணாடிக் குமிழும் மற்றொரு முனையில் கால்கள் போன்ற மெல்லிய இரு கம்பிகள் சிறிய அளவில் காணப்படும்.
இந்தக் கம்பிகள் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருக்கும். சிறிய கம்பி எதிர்மின் முனையுடனும் (Cathode) (-), பெரிய கம்பி நேர்மின் முனையுடனும் (Anode) (+) இணைக்கப்பட வேண்டும். இந்த ஒளிஉமிழ் இருமுனைய விளக்குகள் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் எனப் பல வண்ணங்களில் கிடைக்கின்றன.
அமெரிக்காவின் MIT பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.
இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும் போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நியூரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம். இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune system) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.
ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிறப்பு வண்ண விளக்கு நியூரான்களை(Neuran) செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது. உடலியக்கம் பல மின் தூண்டல்களால் தான் நடைபெறு கிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்