அறிவியல்-அறிவோம்: "உலர் திராட்சை" -மகத்துவம் அறிவோம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 16, 2019

அறிவியல்-அறிவோம்: "உலர் திராட்சை" -மகத்துவம் அறிவோம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
(S.HARINARAYANAN) பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. திராட்சையை உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும்.
உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். ஆதி காலத்திலிருந்தே காய்ந்த திராட்சை உணவாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காய்ந்த திராட்சையை தயாரித்து, உணவில் உபயோகிக்கும் பழக்கம் 1490-ம் ஆண்டிலேயே இருந்திருக் கிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் உலர்திராட்சையை உணவில் அதிகம் பயன்படுத்தி வந்திருக் கிறார்கள். உலகம் முழுவதும் காய்ந்த திராட்சை தயாரிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதிலும் உற்பத்தியாகும் மொத்த உலர் திராட்சையில் பாதி அளவு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தயார் ஆகிறது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உலர் திராட்சை அதிகம் உற்பத்தி ஆகிறது.
காய்ந்த திராட்சை, உலர்ந்த திராட்சை என்று அழைக்கப்படுபவை, பழமாக இருந்த திராட்சையை காய வைத்து பதப்படுத்துவதால் கிடைப்பதே! 4 டன்னுக்கும் மேலாக உள்ள திராட்சைப் பழங்களைக் காயவைத்தால், கிட்டத்தட்ட ஒரு டன் காய்ந்த திராட்சை கிடைக்கும்.திராட்சைப் பழங்களைக் காயவைக்கும்போது அதிலிருக்கும் தண்ணீர்ச்சத்து நீங்கி, உலர்ந்து காய்ந்த திராட்சை கிடைக்கிறது. முதியோர்கள் இரண்டு டீஸ்பூன் அளவு உலர் திராட்சையை தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் கொழுப்பு சேராது. தினமும் ஒரு டீஸ்பூன் அதாவது சுமார் பத்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்து அதிகமாகும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இரும்புச்சத்து ஆண்களுக்கு தினமும் 8 மில்லி கிராமும், பெண்களுக்கு 18 மில்லி கிராமும் தேவை. 45 கிராம் அளவுள்ள உலர்திராட்சையில் 0.81 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
கேட்டசிங்’ ( Cateching ) என்று அழைக்கப்படும் ஒரு பொருள், உலர் திராட்சையில் இருக்கிறது. இது உணவுப்பாதையில் புற்றுநோய், கட்டி போன்றவை உருவாகுவதை தடுக்கும். ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை தோன்றாமலும் பார்த்துக்கொள்ளும். ஐரோப்பிய நாடுகளில், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர் களுக்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின்பு கடைசியாக ‘உலர் திராட்சை சிகிச்சை’ ( Ra-is-in Cure ) என்பதனை கிட்டத்தட்ட ஒரு மாதம் கொடுப்பார்கள். இந்த சிகிச்சைக்குப் பின்பு அவர் உற்சாகமடைந்து சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடுவார். ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் இப்போதும் சிகிச்சை நடைமுறையில் உள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews