👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அண்ணா பல்கலையின் புதிய தேர்வு முறைக்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து, பல்கலையின் துணைவேந்தர், சுரப்பா தலைமையில், இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், புதிய பாட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி ஆகியவற்றில், இந்த பாட திட்டம் அமலுக்கு வந்தது.இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் இன்ஜி., கல்லுாரிகளிலும், புதிய பாட திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. மீண்டும் தேர்வுஇந்த திட்டத்தில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான, 'அரியர்ஸ்' முறை ஒழிக்கப்பட்டது. தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கான, 'இன்டர்னல்' மதிப்பெண்ணும் ரத்தாகி விடும்.அதற்கு பதில், தேர்ச்சி பெறாத பாடத்துக்கு, மாணவர்கள் புதிதாக மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.
இந்த தேர்வும், அவர்கள் தோல்வியுற்ற ஆண்டுக்கு, அடுத்த ஆண்டில் தேர்வு எழுத முடியாது; அதற்கு அடுத்த ஆண்டு மட்டுமே எழுத முடியும். நடுவில் ஓராண்டுக்கு, அவர்கள், அந்த பாடத்துக்கான பயிற்சி பெற வேண்டும்.இந்த தேர்வு முறையால், தங்களுக்கு ஓராண்டு வீணாவதாக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இருந்தது போல, அரியர்ஸ் தேர்வை எழுதும் முறை வேண்டும் என, கோரிக்கை விடுத்து, சில கல்லுாரி மாணவர்கள், ஜன., 18ல் போராட்டம் நடத்தினர்.'இதுகுறித்து, ஆய்வு குழு அமைத்து, உரிய முடிவுகள் எடுக்கப்படும்' என, பல்கலையின் பொறுப்பு பதிவாளர், குமார் அறிவித்தார். இதற்கிடையில், இந்த பிரச்னை குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கவுன்சில் விதிகள்இந்நிலையில், இந்த பிரச்னையை எப்படி கையாள்வது, கல்லுாரிகளின் பிரதிநிதிகள் சொல்வது என்ன; கல்வியாளர்கள் மற்றும், ஏ.ஐ.சி.டி.இ., என்ற இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகள் என்னவென்று, பல்கலை நிர்வாகம், இன்று ஆலோசனை நடத்துகிறது.இதில், துணைவேந்தர் சுரப்பா, பொறுப்பு பதிவாளர், குமார், பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் மற்றும் அகாடமிக் இயக்குனரக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்