👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
லேப்டாப் மற்றும் கணினிகளில் எந்த OS (இயங்குதளம்) இருக்கும்போது ஐஆர்சிடிசி இணையதளத்தை திறக்க முடியாது என்று இங்கு பார்ப்போம்.
2018-ம் ஆண்டு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்ரேஷன்
www.irctc.co.in இணையதளத்தை புதுப்பித்துள்ளது. தற்போது இந்த புதிய தளத்தில் பாதுகாப்பு வசதிகளை மெருகேற்றும் நடவடிக்கையாக சில கணினி OS-களில் மட்டும் ஐஆர்சிடிசி தளத்தை திறக்க முடியாத நிலைக்கு பயனர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே லேப்டாப் மற்றும் கணினிகளில் எந்த OS (இயங்குதளம்) இருக்கும்போது ஐஆர்சிடிசி இணையதளத்தை திறக்க முடியாது என்று இங்கு பார்ப்போம்.
ஐஆர்சிடிசி இணையதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 இயங்குதளங்களின் TLS 1.1, TLS 1.2 மற்றும் இதற்கு முந்தைய இயங்குதளங்களைப் பயன்படுத்தும் கணினிகளில் பயன்படுத்த முடியாது.
ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 இயங்குதளங்களின் SSL 2.0, SSL 3.0, TLS 1.0 பதிப்புகள் பயன்படுத்தும் கணினிகளில் ஐஆர்சிடிசி இணையதளத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் 7, விண்டோஸ் சர்வர் 2008 R2, விண்டோஸ் 8, விண்டோஸ் சர்வர் 2012, விண்டொஸ் 8.1, விண்டோஸ் சர்வர் 2012 R2, விண்டொஸ் 10, விண்டோஸ் சர்வர் 2016 ஆகிய இயங்குதளங்களின் அனைத்துப் பதிப்புகளிலும் ஐஆர்சிடிசி இணையதளத்தைப் பயன்படுத்த முடியும்.
எனவே உங்கள் கணினியில் பயன்படுத்தும் உலாவியின் (Browser) செட்டிங்ஸை திறந்து அதில் அட்வான்ஸ் செட்டிங்சில் நெட்வொர்க் என்பதை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அதில் உள்ள பிராக்ஸி செட்டிங்ஸ் கிளிக் தேர்வு செய்து, அட்வான்ஸ் டேபில் செக்யூரிட்டி என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் TLS 1.1, TLS 1.2, SSL 2.0, SSL 3.0, TLS 1.0 என்ற தெரிவுகளுக்கு டிக் மார்க் உள்ளதா? என்று சரி பார்க்க வேண்டும். இந்தச் செட்டிங்ஸ்களில் திருத்தம் செய்வதன் மூலம் ஐஆர்சிடிசி தளத்தை அனைத்து இயங்குதளங்களிலும் திறக்க முயலலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்