முதல் முறையாக இரண்டாவது தேர்வுக்கான வாய்ப்பு ஜெ.இ.இ மெயின் 2ம் கட்ட தேர்வுக்கு பிப்.8 முதல் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 20, 2019

முதல் முறையாக இரண்டாவது தேர்வுக்கான வாய்ப்பு ஜெ.இ.இ மெயின் 2ம் கட்ட தேர்வுக்கு பிப்.8 முதல் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ஜெஇஇ மெயின் முதல்கட்ட தேர்வு முடிந்த நிலையில் தேர்வு எழுதியவர்களும், தேர்வு எழுதாதவர்களும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அகில இந்திய அளவில் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்‌சர் நுழைவு தேர்வான ஜெஇஇ மெயின் தேர்வு முதல்முறையாக இந்த ஆண்டு இரண்டு முறை நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ நடத்தி வந்த தேர்வு முதல் முறையாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி வாயிலாக நடத்தப்பட்டது.
8 ஸ்லாட்கள் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் முதல்கட்ட தேர்வு கடந்த 14ம் தேதியுடன் நடந்து முடிந்தது. தேர்வில் வினாக்கள் வடிவமைப்பில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு ஸ்லாட்டில் எழுதியவர்களும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர். முதல்கட்ட தேர்வு எளிதாக இல்லாவிட்டாலும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தவில்லை என்று பொதுவாக தேர்வர்கள் கூறுகின்றனர். இதனால் கட் ஆப் மதிப்பெண் அளவும் கடந்த ஆண்டை போன்றே இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்தது. கணித கேள்விகள் கடந்த ஆண்டைவிடவும் கடினமாக இருந்தது. வேதியியல் எளிமையாக இருந்தது என்கின்றனர் தேர்வர்கள். என்சிஇஆர்டி புத்தகங்களில் இருந்து நேரடியாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
இந்தநிலையில் சிறப்பாக தேர்வு எழுதாதவர்கள் தங்கள் ஸ்கோர் உயர்த்திக்கொள்ளவும், முதல்கட்ட தேர்வில் பங்கேற்காதவர்கள் தேர்வு எழுதவும் வசதியாக வரும் ஏப்ரல் மாதம் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜெஇஇ இரண்டாம் கட்ட தேர்வுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் மாதம் 6ம் தேதிக்கும், 20ம் தேதிக்கும் இடையே தேர்வு நடத்தப்படும். இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்றவர்களுக்கு எதில் அதிக ஸ்கோர் உள்ளதோ அதுவே தர வரிசைக்கு பரிசீலிக்கப்படும். எனவே முதல்கட்ட தேர்வு சரியாக எழுதாதோரும் அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்து இரண்டாம் கட்ட தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்ற நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளும் வாய்ப்பாக இது அமையும். தேர்வை எதிர்கொள்வது எப்படி?
* முதல்கட்ட தேர்வில் பொது அறிவு பிரிவில் நாசா, ஐஎஸ்ஆர்ஒ போன்ற எழுத்துகளின் விரிவாக்கம் என்ன? என்பது போன்ற சுலபமான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. உங்களுக்கு விருப்பமான சினிமா கலைஞரை படமாக வரையலாம் என்றும் ஒரு கேள்வி ஆர்க்கிடெக்சர் பிரிவில் இடம்பெற்றிருந்தது. எனவே இதே வகையில் உள்ள கேள்விகள் அடுத்த தேர்விலும் வர வாய்ப்பு உள்ளது. சிலபஸ் முழுவதுமாக படிப்பதுடன் முதல்கட்ட தேர்வில் உள்ள 8 சிலாட்களிலும் உள்ள கேள்வித்தாள்களை சேகரித்துக்கொள்வதும், அதன் வினாவிடைகளை மையப்படுத்திக்கொள்வதும் நல்லது. * முதல்கட்ட தேர்வில் சிக்கலை ஏற்படுத்திய கேள்விகளை குறிப்பிட்டு படிக்கலாம். ஆர்க்கிடெக்சர் பிரிவில் சாதிக்க நினைப்பவர்கள் தங்கள் கைவண்ணத்தை மேம்படுத்துவது நலம். தேர்வில் நன்றாக எழுதியவர்கள் ஸ்கோர் அதிகரிக்க புதியதாக தாங்களாகவே கேள்வித்தாள் தயார் செய்தும் படிக்கலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews