பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி? அரசுக்கு சங்க நிர்வாகிகள் புதிய யோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 02, 2018

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எப்படி? அரசுக்கு சங்க நிர்வாகிகள் புதிய யோசனை

பழையை ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு நிறைய உள்ளதாக ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். அதன்படி செயல்பட்டால் அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஊழியர்கள் போராட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு தரப்பில் வாய்ப்பில்லை என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இது குறித்து தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறி இருப்பதாவது: புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5.50 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
இவர்களின் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை, அரசு சார்பில் செலுத்தப்பட்ட 10 சதவீதம் பங்களிப்பு தொகை மற்றும் அதற்குரிய வட்டி என தற்போது ரூ.24,000 கோடி அரசிடம் உள்ளது. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தால் 50 சதவீதம் அதாவது ரூ.12,000 கோடி அரசு கரூவூலத்திற்கு திரும்ப வந்துவிடும்.
மீதமுள்ள ரூ.12,000 கோடியை பணியாளர்களின் பங்களிப்பு ெதாகையை ஊழியர்களுக்கு சேமநல நிதி கணக்கு துவங்கி அதில் பற்று வைத்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னரே அத்தொகையை பயன்படுத்த அனுமதிக்கலாம். இதனால் அரசுக்கு உடனடி நிதி இழப்பீடு எதுவும் ஏற்படாது. மேலும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் 10 சதவீத பங்களிப்பு தொகை அளிக்க வேண்டிய அவசியம் எழாது. இதனால் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அரசுக்கு நிதிச்சுமை குறையும்.
தற்போதுள்ள சூழலில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும்பட்சத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பெரிய தொகையான ரூ.24,000 கோடியை அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். அரசு இதுகுறித்து பரிசீலித்து விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews