இவ்வாறு செய்தால் உங்கள் வாட்ஸ்ஆப்-க்கு(WhatsApp) ஆப்புதான்!! அதிரடி எச்சரிக்கை!: தப்பிக்க 8 வழிகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 19, 2018

இவ்வாறு செய்தால் உங்கள் வாட்ஸ்ஆப்-க்கு(WhatsApp) ஆப்புதான்!! அதிரடி எச்சரிக்கை!: தப்பிக்க 8 வழிகள்!!




நம்மிடையே சமூக வலைத்தளங்கள் என்பது வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் பேஷ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை பிரபல நிறுவனங்களாக உள்ளது. நாளுக்கு நாள் பேஷ்புக், வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக வலைத்தளங்கள் என்பது நற்காரியங்களை செய்வதில் முக்கிய பங்கு வகித்தாலும் தீமையும் துணையாக இருப்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது.இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் சில விதிமுறைகளை விதித்துள்ளது.

இந்த விதிமுறைகளை மீறினால் நீங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.
1. ஆபாசமிகுந்த, தீங்கு ஏற்படுத்தும் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பக்கூடாது.
2. மனதை பாதிக்கச் செய்யும் தகவல்கள், வன்முறை குற்றங்கள், அச்சுறுத்தும் விதமான பேச்சுக்கள் அடங்கிய செய்திகளை பரப்பக்கூடாது.
3. மற்றவர் பெயரில் பொய் கணக்கு தொடங்கி, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பக்கூடாது.
4. வாட்ஸ்ஆப் செயலிக்கு என உருவாக்கப்பட்டுள்ள ப்ரோகிரேமில் மாற்றத்தை ஏற்படுத்துவது செயலில் ஈடுபட்டால் அந்நிறுவனம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

5. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, மால்வார் போன்ற கேஜெட்டுகளை அழித்துவிடும் வைரஸுகளை பரப்புவதும் கூடாது.
6. பயனர்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு சர்வரில் சென்று சேரும். அதை ஹேக் செய்யவோ அல்லது உளவு பார்த்தாலோ, வாட்ஸ்ஆப் உங்களை தடை செய்யலாம்.
7. ப்ளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்ஆப் பிளஸ் என்ற செயலியை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் அது வாட்ஸ்ஆப் செயலியே அல்ல.
8.பல நபர்கள் உங்களை பிளாக் செய்து வந்தால், தானாகவே உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு அழிந்து விடும். இவ்வாறு வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews