School Morning Prayer Activities - 08.11.2018 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 07, 2018

School Morning Prayer Activities - 08.11.2018




பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

உரை:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.


பழமொழி :

Diligence is the mother of good fortune

முயற்சி திருவினையாக்கும்

பொன்மொழி:

அதிர்ஷ்டத்தின்
விளையாட்டுதான்
ஒரு மனிதனின்
வாழ்க்கை.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
சுவிட்சர்லாந்து

2.நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
நார்வே

நீதிக்கதை

காகமும் நாய்க்குட்டியும் - நீதிக் கதைகள்

(Crow and Dog Moral Story)


ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள்.

அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.


உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள்.

மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

இன்றைய செய்தி துளிகள்:




1.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியில் காற்றுமாசு குறைவு : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

2.ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைபதிவேடு முறை: அரசாணை வெளியீடு

3.9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் இணைய சேவை வசதியுடன் கணினி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

4.தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை

5.சீன ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் சிந்து
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews