'அறிவியல் அறிவோம் 'வாழையிலையில் சாப்பிடுவதற்கு என்ன காரணம் தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 15, 2018

'அறிவியல் அறிவோம் 'வாழையிலையில் சாப்பிடுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

வாழைஇலையில் இயற்கையிலேயே கிருமிநாசினி உள்ளது. உணவில் ஏதாவது நச்சு கலந்திருந்தால் கூட வாழையிலையில் சாப்பிடும்போது இலை அதனை நீக்கிவிடுகிறது என்று பல கூற்றுகள் நம்மிடையே நிலவுகின்றது.
👉 ஆனால் வாழையிலை சாப்பிட பயன்படுத்துவதற்கான காரணம் அதனது நீர்ம தொடர்பு கோணம் (Wetting contact angle) ஒரு பொருளின் மேற்பரப்பில் ஒரு துளி தண்ணீரை விடும்போது அந்த தண்ணீர் எந்தளவிற்கு அதன் பரப்போடு பரவி உறவாடுகிறது என்பதே Contact angle. உதாரணமாக ஒரு பைண்டிங் செய்யப் பயன்படும் காகிதக்கூழ் அட்டையின் கோணம் மிக குறைவு. எனவே அதில் தண்ணீர் விட்டவுடன் பரவி அதன் பரப்போடு ஒட்டிக்கொள்ளும். இதுவே ஒரு பிளாஸ்டிக் அட்டையின் Contact angle மிக அதிகம். அதன் மீது தண்ணீர் நிற்காது. Contact angle 90*க்கு அதிகமாக இருந்தால் அந்தப்பரப்பை Hydrophobic என்கிறோம். அதாவது தண்ணீரை அண்ட விடாதவை. 90*க்கும் குறைவாக இருந்தால் அவை Hydrophilic தண்ணீரை ஏற்கக்கூடியவை.
இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய தாவர இலைகளில் மிக அதிக Contact angle ஐ பெற்றிருப்பது தாமரை இலை. அதன் கோண அளவு சுமார் 150*. எனவேதான் தாமரை இலை மீது திரவம் எதுவும் தங்குவதில்லை. தாமரை இலைக்கு அடுத்தபடியாக அதிக Contact angle பெற்றிருப்பது வாழை இலை. சுமார் 130*. சாம்பார், ரசம், மோர் என எந்த திரவத்தை ஊற்றினாலும் வாழையிலை அதன் Contact angle காரணமாக அவற்றை பரவவிடுவதில்லை. இலை பரப்பில் திரவம் ஊடுறுவதில்லை. மேலும் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள சீரான வடிவம், போக எல்லா இடங்களிலும் எளிதாக கிடைப்பதால் வாழையிலை பயன்படுத்தப்படுகிறது. அப்புறம், வாழையிலை விஷத்தை முறிக்கும் என்று நம்பி, மோருக்கு பதில் பாலிடாயில் ஊற்றி சாப்பிட்டால், நிச்சயம் பால் ஊற்றவேண்டிவரும்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews