பெற்றோரை ரத்ததானம் செய்ய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 18, 2018

பெற்றோரை ரத்ததானம் செய்ய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

ப ள்ளியில் பயிலும் மாணவர்கள், தங்களின் பெற்றோருக்கு ரத்ததானம் குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்தி குருதிக் கொடையளிக்க அழைத்து வந்த அரிய நிகழ்வு நெல்லையில் நடைபெற்றது. டெங்கு காய்ச்சலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்த சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
நோயாளிகளுக்கு அவசியமான நேரத்தில் கிடைக்கும் ஒவ்வொரு சொட்டு குருதியும் அவர்களின் உயிரைக் காக்கும் வாய்ப்பாக அமைகிறது. அதனால் ரத்ததானம் குறித்த விழிப்புஉணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் முயற்சிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் சமூக நல அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் தற்போது கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கூட ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியமும் முக்கியத்துவமும் தெரிய வந்திருக்கிறது.
பொதுவாக கிராமப் பகுதிகளில் நடக்கும் ரத்ததான முகாம்கள் அங்குள்ள பள்ளி வளாகத்திலேயே நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருப்பவர்கள் என்பதால் அவர்கள் குருதிக் கொடையளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி கிராமத்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடத்த ரத்ததான முகாம் வழக்கமான நடைமுறையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் பள்ளி நிர்வாகமும் இணைந்து நடத்திய முகாமின் கதாநாயகர்களே அந்தப் பள்ளியின் மாணவர்கள் தான். கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோருக்கு குருதிக் கொடையின் அவசியத்தை விளக்கமாக எடுத்துக் கூறி அழைத்து வந்தனர். அத்துடன், தங்கள் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற இருப்பதால் அதில் பங்கேற்க வேண்டும் எனப் பெற்றோரை வலியுறுத்தினார்கள். அதனை ஏற்று 380 பெற்றோர் குருதிக் கொடையளிக்க சம்மதித்து பள்ளியில் பெயர் பதிவு செய்தது தான் இந்த முகாமின் ஹைலைட்.
பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 85 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார்கள். அவர்கள் அனைவருமே மாணவர்களின் பெற்றோர். பெண்கள் கூட இந்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தார்கள். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ரஜினி ரத்ததானக் கழகத்தின் நிறுவனரான வெங்காடம்பட்டி திருமாறன் செய்திருந்தார். ரத்ததானம் தொடர்பாக லிம்கா சாதனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள அவரிடம் இந்த முகாம் பற்றி கேட்டதற்கு, ’’கடந்த 32 வருடங்களுக்கு முன்பு ரஜினியின் பெயரில் ரத்ததானக் கழகம் தொடங்கி இப்போது வரையிலும் நடத்தி வருகிறோம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews