அறிவியல்-அறிவோம்: இளநீரை வெறும்வயிற்றில் அருந்தலாமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

அறிவியல்-அறிவோம்: இளநீரை வெறும்வயிற்றில் அருந்தலாமா?

நாம் அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். கிராமப்புறங்களில் சர்வசாதரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.
தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.
அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்.
தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். ஜிம்முக்கு செல்பவர்கள், அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது. அதாவது நீங்கள் எந்த காரணத்திற்காக என்ன உடற்பயிற்சி செய்கிறேர்களோ, அந்த பலன், வித்தியாசம், வெகு விரைவில் தெரியும். மதிய உணவுக்கு முன்/பின் மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடற்சூடு தணிக்கப்படுகிற. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் பவர் இளநீருக்கு உண்டு. இரவு படுக்கைக்கு முன்: இனிமையான இரவு உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், நார்மலாக சாந்தமாக இருக்கச் செய்கிறது. இதனால், அன்றாட நமக்கு இருக்கும் எரிச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும்.
"பூலோகக் கற்பக விருட்சம்' என்று இளநீர் சித்தமருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இதில் A,B,C,K போன்ற வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும்.
உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது"
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews