'அறிவியல் அறிவோம் 'காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 23, 2018

'அறிவியல் அறிவோம் 'காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா?

சில பேருக்கு காலையில் எழுந்ததும் பல் துலக்கி குளித்து விட்டு செல்லும் பழக்கம் மட்டும் இருக்கும். சில பேர்கள் மாலையில் குளிப்பதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். சில பேர்களுக்கு இரவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் குளிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் சற்று வித்தியாசமான பழக்க வழக்கங்களை தினசரி மேற்கொண்டு வருகிறோம்.
👉நன்றாக தூங்குவதற்கு : நிறைய பேர்கள் காலையில் குளிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். மாலையில் குளிப்பதால் இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வரும்.'தூக்க கண்ணோட்டத்தின் வகையில் பார்த்தால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது நல்லது. இது உடலுக்கு ஒரு வித புத்துணர்வை கொடுக்கிறது. இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல் வெப்ப நிலையை ஓரளவு சீராக்கி நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும். எனவே தூங்குவதற்கு ஒரு 30 நிமிடங்கள் முன்னாடி வெதுவெதுப்பான நீரில் சின்ன குளியல் போட்டு செல்லலாம். 'இன்ஸோமினியா போன்ற தொந்தரவு உடையவர்கள் படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி குளிக்க செல்லலாம். இது உடல் வெப்பநிலையை சீராக்கி நல்ல உறக்கத்தை தருகிறது.
👉புத்துணர்விற்கு : காலையில் எழுந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. காரணம் நீர் நமது உடலுக்கு நல்ல புத்துணர்வை கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. தீர்வு: 1)தூக்க பிரச்சினைக்கு இரவு நேர குளியல் என்பது மிகச் சிறந்தது. 2)காலையில் சுறுசுறுப்பாக செயல்பட காலை குளியலையும் எடுத்து கொள்ளலாம். 👉சரும உணர்வு: காலையில் குளிப்பதற்கும் மாலையில் குளிப்பதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த குளியல்களால் சருமத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் நீங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஆழ்ந்த உறக்கம் ஏற்பட உதவுகிறது. இந்த நல்ல தூக்கம் உங்கள் சருமத்திற்கு நல்லது.
👉வியர்வை : சிலர் நாள் முழுவதும் வேலை பார்த்த களைப்பு, சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்க வேண்டும். அப்படியே படுக்கைக்கு செல்வதை அசெளகரியமாக உணர்கிறார்கள். இதனால் படுக்கைக்கு முன் குளிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்து விட்டு வியர்வை நீங்க குளிப்பது நல்லது. இது நமக்கு நாள் முழுவதும் ஒரு செளகரியத்தை ஏற்படுத்தும். தீர்வு: மாலை நேர குளியல் ஆஸ்துமா மற்றும் அழற்சி உடையவர்களுக்கு ஒத்துவராது. மற்றபடி எப்பொழுது வேண்டும் என்றாலும் குளித்து கொள்ளலாம். 👉கூந்தலின் தன்மையை பொருத்து : கூந்தலின் தன்மையை பொருத்து கூட குளியலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எண்ணெய் பசை உடைய கூந்தல் உடையவர்களுக்கு காலை குளியல் மேற்கொள்ளலாம். இது கூந்தலை களையிழக்காமல் வைத்திருக்க உதவும்.
👉ஹேர் டிரையர்: மற்றபடி அடர்ந்த கூந்தலுக்கு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குளித்து கொள்ளலாம். இரவு நேர குளியலுக்கு பிறகு கூந்தலை உலர வைக்கும் கருவிகளை பயன்படுத்துவதை தவிருங்கள். வாரத்திற்கு ஒரு தடவைக்கு மேல் சாம்பு பயன்படுத்தாதீர்கள். 👉பொடுகு : இரவு நேர குளியலுக்கு பிறகு கூந்தலை நன்றாக காய வையுங்கள். இல்லையென்றால் இது மைக்ரோபஸ்களை உண்டாக்கி பொடுகுத் தொல்லையை ஏற்படுத்தி விடும். தீர்வு: எனவே உங்களுக்கு எண்ணெய் பசை கூந்தல் இருந்தால் காலையில் குளிப்பது நல்லது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews