மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்தும் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் எனும் இணைய வழி அறிவியல் தேர்வு தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மற்றும் விஞ்ஞான பாரதி அமைப்பு ஆகியவை இணைந்து இத் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன.
2018- 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து 7200 மாணவர்கள் இணைய வழியில் மடிக் கணிணி, நிலைக் கணிணி, அலைபேசி, கையடக்க கணினி ஆகியவற்றில் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 160 பள்ளிகள் மற்றும் 280 தனி தேர்வர்களும் பங்கேற்கவுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. 1200 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். நவ.25, 28 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.
ஆன்ட்ராய்டு செயலி, கணினி பயன்படுத்தி இணையவழியில் நடைபெற உள்ளதால் இத் தேர்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்கு, தமிழ்நாடு விஞ்ஞான பாரதி ஒருங்கிணைப்புச் செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஆன்ட்ராய்டு செயலியை எவ்வாறு பயன்படுத்துவது, மாதிரி தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார். இந்த தேர்வினால் கிடைக்கும் பரிசுகள், தேர்வு மூலம் கிடைக்கும் அறிவியல் விஞ்ஞானிகளின் தொடர்புகள் குறித்து காரைக்குடி சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி சுதாகர் விளக்கிக் கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில், தமிழகம் முழுவதும் இருந்து 60 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், விஞ்ஞான பாரதி உறுப்பினர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்