முதல் இந்திய பெண் போர் விமானி: சாதனை படைத்த அவனி சதுர்வேதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 13, 2018

முதல் இந்திய பெண் போர் விமானி: சாதனை படைத்த அவனி சதுர்வேதி

24 வயதாகும் அவனி சதுர்வேதி முதல் இந்திய பெண் போர் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் அவர் `மிக்- 21 பைசன்`(Mig-21 Bison)என்ற போர் விமானத்தை தனியாகி ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
இது பெண்களுக்கான தடைகளை உடைத்து சாதனை படைப்பது போன்றது என்று பிபிசியிடம் தெரிவித்தார் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் அனுபம் பேனர்ஜி. நாட்டின் ஆயுதப் படை வரலாற்றில் இது "மிக முக்கியமான நாள்" என்றும் அவர் கூறுகிறார். இந்திய விமானப்படையில் சமீபமாக சேர்ந்த மூன்று பெண்களில் சதுர்வேதியும் ஒருவர்.
விமானத்தை செலுத்திய பிறகு அதன் அருகில் அவனி இருப்பது போன்ற புகைப்படத்தை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார் ஆனால் விமானப்படை இந்த செய்தியை வியாழனன்று வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப் படையில் 20 பெண் போர் விமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews