உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 5 ( November 5 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 05, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 5 ( November 5 )



நவம்பர் 5 ( November 5 ) கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 310 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 – இரண்டாம் பானிபட் போர் :
முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை
பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.
1605 – வெடிமருந்து சதித்திட்டம்:
இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான்.
1688 – இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான்.
1757 – ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று
யாழ்ப்பாணம் , விடத்தல் தீவு , மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின. [1]
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட
நாட் டர்னர் வர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
1862 – அமெரிக்கா,
மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 38 பேர் தூக்கிலிடப்பட்டனர்..

1872 – அமெரிக்காவில்
பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய
சூசன் ப்ரவுன் அந்தோனி முதல் தடவையாக வாக்களித்தார். இதனால் இவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
1895 – தானுந்துக்கான முதலாவது அமெரிக்கக்
காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.
1898 – பிலிப்பீன்சு , நெக்ரோசு தீவில் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, நெக்ரோசு குடியரசை நிறுவினர்.
1911 – செப்டம்பர் 29 இல் உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போரை அறிவித்த இத்தாலி திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1912 – ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது
அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1914 – முதலாம் உலகப் போர்:
பிரான்சும் பிரித்தானியப் பேரரசும் உதுமானியப் பேரரசு ம் ஈது போர் தொடுத்தன.

1916 – போலந்து இராச்சியம் செருமனி, மற்றும் ஆத்திரியா-அங்கேரி பேரரசர்களினால் அறிவிக்கப்பட்டது.
1916 – வாசிங்டன் , எவெரெட் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1917 – விளாதிமிர் லெனின்
அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1917 – அக்டோபர் புரட்சி :
எசுத்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார். (பழைய நாட்காட்டியில் [அக்டோபர் 27]]).
1925 – சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய சைராணுவ சரக்குக் கப்பல் யார்விசு பே

செருமனியின் போர்க்கப்பலால் தாக்கப்பட்டு மூழகடிக்கப்பட்டது.
1940 – பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார்.
1943 – இரண்டாம் உலகப் போர்:
வத்திக்கான் மீது தாக்குதல் தொடங்கியது.
1945 – சுபாசு சந்திர போசின்
இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை தில்லி
செங்கோட்டையில் ஆரம்பமானது.
1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1970 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கப் படையினரின் ஒரு வார உயிரிழப்புகள் (24) கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என வியட்நாம் இராணுவ உதவிக் கட்டளையகம் அறிவித்தது.
1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
1995 – கனடா பிரதமர் சான் சிரேட்டியன் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
1996 – பாக்கித்தான் சனாதிபதி பாரூக் லெகாரி பிரதமர்
பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
2006 – 148 சியா முசுலிம்களை 1982-இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
2007 – ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.
2009 – டெக்சசு மாநிலத்தில் அமெரிக்க இராணுவ மேஜர் நைடல் மாலிக் அசனின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 காயமடைந்தனர்.

2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.
2017 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் கிறித்தவக் கோவில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்க்சி சூட்டில் 26 கொல்லப்பட்டு, மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்
1790 – சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் , செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (இ. 1838)
1870 – சித்தரஞ்சன் தாஸ் , இந்திய அரசியல்வாதி (இ. 1925 )
1885 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1981 )
1888 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1945 )
1892 – ஜே. பி. எஸ். ஹால்டேன் , ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (இ. 1964 )
1906 – பிரெட் இலாரன்சு விப்பிள் , அமெரிக்க வானியலாளர் (இ. 2004 )
1913 – விவியன் லீ , இந்திய-பிரித்தானிய நடிகை (இ. 1967 )
1916 – கனக செந்திநாதன் , ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 1977 )

1918 – க. வேந்தனார் , ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1966 )
1927 – கிர்ரோடுகு அகேய்கே , சப்பானிய புள்ளிவிபரவியலாளர் (இ. 2009 )
1930 – அர்ஜுன் சிங் , இந்திய அரசியல்வாதி (இ. 2011 )
1930 – பூ. பழனியப்பன் , இந்திய மகப்பேறு மருத்துவர்
1948 – பாப் பார் , அமெரிக்க அரசியல்வாதி
1952 – வந்தனா சிவா, இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர்
1955 – கரண் தபார் , இந்திய ஊடகவியலாளர்
1959 – பிரையன் ஆடம்ஸ் , கனடியப் பாடகர், நடிகர்
1965 – பாம்கே ஜான்சென், டச்சு நடிகை
1987 – கெவின் கோனாஸ், கனடிய பாடகர் மற்றும் நடிகர். ( ஜோனாஸ் சகோதரர்கள் )
1988 – விராட் கோலி , இந்தியத் துடுப்பாளர்🎂🍫🏏🎁🎉🎊


இறப்புகள்
1526 – டெல் ஃபெர்ரோ , இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1465 )
1860 – சைமன் காசிச்செட்டி , இலங்கை தமிழறிஞர், அகராதியியலாளர், அரசியல்வாதி (பி. 1807 )
1879 – ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் , இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1831 )
1944 – அலெக்சிஸ் காரெல் , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (பி. 1873 )
1992 – அர்பத் எலோ , அமெரிக்க இயற்பியலாளர், சதுரங்க ஆட்ட வீரர் (பி. 1903 )
1992 – ஜான் ஊர்த் , இடச்சு வானியலாளர் (பி. 1900 )
2002 – கு. ப. சேது அம்மாள் , தமிழக எழுத்தாளர் (பி. 1908 )
2008 – மைக்கேல் கிரைட்டன் , அமெரிக்க மருத்துவர் (பி. 1942 )
2011 – பூபேன் அசாரிகா , இந்தியப் பாடகர், இயக்குநர் (பி. 1926 )

சிறப்பு நாள்
கை பாக்சு இரவு ( ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து ,
நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் , கனடா)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews