உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 4 ( November 4 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 04, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 4 ( November 4 )




நவம்பர் 4 ( November 4 ) கிரிகோரியன் ஆண்டின் 308 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1576 – எண்பதாண்டுப் போர்:
பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின்
ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.
1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர்
வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர்.
1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர் :
கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன.
1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1890 – இலண்டனின் முதலாவது
பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.

1918 – முதலாம் உலகப் போர்:
இத்தாலியிடம் ஆத்திரியா-அங்கேரி சரணடைந்தது.
1921 – சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1922 – எகிப்தில் , பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர்
மன்னர்களின் சமவெளியில்
துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்:
இட்லரின் ஆணையைக் கருத்தில் எடுக்காமல், மார்சல் இர்வின் ரோமெல் இரண்டாம் அல்-அலமைன் சண்டையில் பெரும் தோல்வியடைந்த தனது படைகளை விலக்க முடிவு செய்தார்.
1952 – அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பை நிறுவியது.
1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான
அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள்
அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
1966 – இத்தாலி , புளோரன்சு நகரில் ஆர்னோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன. வெனிசு நகரம் மூழ்கியது.

1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
1970 – இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே
சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
1979 – ஈரானியத் தீவிரவாதிகள்
தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1980 – ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது
அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில்
சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு : இசுரேலியப் பிரதமர்
இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12
பிரான்சியப் படையினர் மற்றும் 3
ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2008 – அமெரிக்க
அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது
ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவழியினர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார்.
2010 – கியூபாவில் ஏரோ கரிபியன் வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 68 பேரும் உயிரிழந்தனர்.
2015 – பாக்கித்தான் லாகூர் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
2015 – தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று
தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1650 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702 )
1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே , இந்தியப் புரட்சியாளர் (இ. 1883 )
1884 – ஜம்னாலால் பஜாஜ் , இந்தியத் தொழிலதிபர் (இ. 1942)
1897 – ஜானகி அம்மாள் , இந்தியத் தாவரவியலாளர் (இ. 1984 )
1906 – ழான் ஃபில்லியொசா , பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982 )
1915 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 2005 )
1929 – சகுந்தலா தேவி , இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2013 )

1933 – சார்லசு காவோ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்
1957 – டோனி அபோட் , ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்
1969 – மேத்திவ் மெக்கானாகே , அமெரிக்க நடிகை
1972 – தபூ , இந்திய நடிகை
1983 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ் , உருசிய வானியற்பியலாளர் (இ. 2014 )
1991 – வித்யுலேகா ராமன் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1918 – வில்ஃபிரட் ஓவன் , ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893 )
1920 – உலூத்விக் சுத்ரூவ , உருசிய வானியலாளர் (பி. 1858 )
1981 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1926)
1985 – டி. கே. இராமானுஜக் கவிராயர், தமிழறிஞர், புலவர் (பி.
1905 )
1988 – கி. வா. ஜகந்நாதன் , தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1906 )
1988 – ஜேம்ஸ் இரத்தினம் , ஈழத்து எழுத்தாளர். (பி. 1905 )
1991 – மொகிதீன் பேக் , இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி.
1919 )

1994 – கு. மா. பாலசுப்பிரமணியம் , திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920 )
1995 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922 )
1998 – மரியோன் தொனோவன் , அமெரிக்கப் புதுமைப்புனைவாளர், தொழிலதிபர் (பி. 1917 )
1999 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (பி. 1926 )
2008 – மைக்கேல் கிரைட்டன் , அமெரிக்க மருத்துவர், இயக்குநர் (பி. 1942 )
2012 – ஜேக்கப் சகாயகுமார் அருணி , தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974 )

சிறப்பு நாள்
ஒற்றுமை நாள் ( உருசியா)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews