நீட்' பயிற்சிக்கு பதிவு 152; வந்தது 2 பேர்! 'லிங்க்' கிடைப்பதில் தொடரும் சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 19, 2018

நீட்' பயிற்சிக்கு பதிவு 152; வந்தது 2 பேர்! 'லிங்க்' கிடைப்பதில் தொடரும் சிக்கல்

அன்னுார் வட்டாரத்தில், 'நீட்' பயிற்சி துவங்கி இருமாதங்களாகியும், 'சாடிலைட் லிங்க்' கிடைக்காததால், ஆசிரியர்கள் நேரடியாக வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால் மாணவர்களிடம் வகுப்பில் பங்கேற்பதில் ஆர்வம் குறைந்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும், 412 பள்ளிகளில், 'நீட்' மற்றும் 'ஜே.இ.இ.,' பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன், பல கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, 'சாடிலைட் லிங்க்' மூலம் தனியார் பயிற்சி நிறுவனங்கள், 412 மையங்களிலும் பயிற்சி தர வேண்டும் அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், சொக்கம்பாளையம், காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டம்பட்டி, அன்னுார், ஆணையூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் கே.ஜி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து, நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சியில் பங்கேற்க, 152 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.துவக்கத்தில், 70 சதவீதம் பேர் பயிற்சிக்கு வந்தனர். மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த வாரம் 12 பேர் மட்டும் பயிற்சிக்கு வந்திருந்தனர். நேற்று நீட் பயிற்சிக்கு ஒரு மாணவர், ஒரு மாணவி என, இருவர் மட்டும் வந்திருந்தனர். இவர்களுக்கு கற்பிக்க காலையில் இரு ஆசிரியர்கள், மதியம் இரு ஆசிரியர்கள் என, நான்கு ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். நான்கு ஆசிரியர்கள் இரு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வி சாட் சேட்டிலைட் மூலம், பள்ளியில் புரஜெக்டர், ஸ்கிரீன் அமைத்து பயிற்சி தரப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அன்னுார் பள்ளி மையத்தில், புரஜெக்டர், மற்றும் ஸ்கிரீன் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கான 'டிஷ்' இரு வாரங்களுக்கு முன் பொருத்தப்பட்டது.ஆனால் இணைப்பு தர டெக்னீஷியன் சென்னை நிறுவனத்திலிருந்து வர வேண்டும் kaninikkalvi அதனால், இருமாதங்களாக ஆசிரியர்கள் நேரடியாக பயிற்சி வகுப்பை நடத்துகின்றனர். நேரடி வகுப்பினால் மாணவர்கள் ஆர்வம் இழந்து விட்டனர். சாடிலைட் லிங்க் கிடைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சிக்கு சேர்ந்த மாணவர்களை பள்ளி நிர்வாகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews