நவம்பர் 13 (November 13 ) கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன்
பழங்குடிகளையும் கொல்லும்படி
ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில்
இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
1887 – மத்திய லண்டன் பகுதியில்
அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
மொரோக்கோவில் எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணினர்.
1916 – முதலாம் உலகப் போர் : இராணுவத்துக்குக் கட்டாய ஆள் சேர்ப்பை ஆதரித்தமைக்காக
ஆத்திரேலியப் பிரதமர் பில்லி இயூசு தொழிற் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
1918 – உதுமானியப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டண்டினோபில் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றின.
1927 – நியூ செர்சியையும்
நியூயார்க் நகரையும் அட்சன் ஆறு ஊடாக இணைக்கும் ஆலந்து சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர் :
வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் செருமனியின் யூ-81 கப்பலினால் தாக்கப்பட்டது. அடுத்த நாள் இது மூழ்கியது.
1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது
தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.
1957 – கோர்டன் கூல்ட் என்பவரால்
லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.
1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல்
பகாமசில் மூழ்கியதில் 90 பேர் உயிரிழந்தனர்.
1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.
1986 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் , மார்சல் தீவுகள் ஆகியன விடுதலை பெறுவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1993 – தவளை நடவடிக்கை :
யாழ்ப்பாணம் , பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை
விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
1995 – சவூதி அரேபியாவில்
ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து
அமெரிக்கர்களும் இரண்டு
இந்தியர்களும் உயிரிழந்தனர்.
2012 – முழுமையான சூரிய கிரகணம் ஆத்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும்
நிகழ்ந்தது .
2013 – அவாய் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
2015 – பாரிசில் இடம்பெற்ற
தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
2015 – புவியின் செயற்கைக்கோள்
டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது.
பிறப்புகள்
354 – ஹிப்போவின் அகஸ்டீன், உரோமை இறையியலாளர் (இ. 430 )
1312 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு (இ. 1377 )
1780 – ரஞ்சித் சிங், சீக்கியப் பேரரசர் (இ. 1839 )
1850 – ஆர். எல். இசுட்டீவன்சன் , இசுக்கொட்டிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1894 )
1899 – ஹுவாங் சியான் புயான் , சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (இ. 1982 )
1913 – வி. அப்பாபிள்ளை , இலங்கை இயற்பியலாளர் (இ. 2001 )
1914 – என்றி லங்லொவைசு , பிரான்சிய திரைப்பட ஆவணக் காப்பாளர் (இ. 1977 )
1923 – ஆல்பர்ட் ராமசாமி , இரீயூனியன் அரசியல்வாதி
1926 – எம். எஸ். செல்லச்சாமி , இலங்கை அரசியல்வாதி
1933 – மோகன் ராம் , தமிழகப் பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1993 )
1934 – கமால் கமலேஸ்வரன் , மலேசிய-ஆத்திரேலிய இசைக் கலைஞர்
1935 – பி. சுசீலா , தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1940 – சவுல் கிரிப்கே , அமெரிக்க மெய்யியலாளர்
1942 – அம்பிகா சோனி , இந்திய அரசியல்வாதி
1947 – அனில் அகர்வால் , இந்திய சுற்றுச்சூழலியலாளர் (இ. 2002 )
1948 – உமாயூன் அகமது , வங்காளதேச எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2012 )
1956 – அம்பிகா சீனிவாசன் , மலேசிய சமூக நீதியாளர்.
1958 – இந்திரா சௌந்தரராஜன் , தமிழக எழுத்தாளர்
1967 – ஜூஹி சாவ்லா , இந்திய நடிகை
1969 – அயான் கேர்சி அலி , சோமாலிய-அமெரிக்க எழுத்தாளர், பெண்ணியவாதி
இறப்புகள்
1916 – சாகி , ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1870)
1922 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் (பி.
1867 )
1933 )
1989 – ரோகண விஜேவீர , இலங்கை கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி. 1943)
1996 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியற்பியலாளர் (பி. 1959)
2002 – கணபதி கணேசன் , மலேசிய இதழாசிரியர் (பி. 1955)
2010 – ஆலன் சாந்தேகு , அமெரிக்க வானியலாளர் (பி. 1926 )
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்