கல்வி கற்க இந்தியா வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதம் அதிகரிப்பு: அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் பர்கஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 14, 2018

கல்வி கற்க இந்தியா வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதம் அதிகரிப்பு: அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் பர்கஸ்

உயர் கல்வி பெறுவதற்காக இந்தியா வரும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் பர்கஸ் கூறினார் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 5.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த 2017-18 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இதில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் பர்கஸ் கூறியதாவது கல்வி கற்பதற்காக அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்கள் வரக்கூடிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
அமெரிக்காவில் வழங்கப்படும் தரமான கல்வி, செய்முறைப் பயிற்சிகள் நிறைந்ததாக இருப்பதுமே இதற்குக் காரணம். அமெரிக்காவில் வழங்கப்படும் பட்டங்கள், உலக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 792 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்றனர். இதில் இந்திய மாணவர்கள் மட்டும் 1 லட்சத்து 96 ஆயிரத்து 271 பேர் ஆவர்.
இந்த எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, உயர் கல்வி பெற அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு (2016-17) 1,86,267 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வந்தனர். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போன்று உயர் கல்வி பெற இந்தியா வரும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
கடந்த 2016-17-இல் இந்தியா வந்த அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை 4,181 ஆக இருந்தது. இது இப்போது 4,704 ஆக உயர்ந்திருக்கிறது அதாவது 12.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றார் அவர் கணிதம், கணினி அறிவியல் படிப்பவர்களே அதிகம் அமெரிக்க தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆண்டறிக்கையின்படி, அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் கணிதம், கணினி அறிவியல், பொறியியல் மேற்படிப்புகளுக்காகவே செல்வது தெரியவந்துள்ளது
அதாவது அங்கு செல்பவர்களில் 73 சதவீதம் மாணவர்கள் இந்தப் பிரிவுகளில் சேர்ந்துள்ளனர் மேலும், 10 சதவீதம் மாணவர்கள் வணிக மேலாண் துறை படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர் 8 சதவீதம் பேர் மருத்துவம், இயற்பியல் அறிவியல் துறைகளில் சேர்ந்து படிக்கச் சென்றிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews