சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 08, 2018

சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும்

11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதிகளை அறிமுகப்படுத்தினார். இவருடன் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஸ்கில் ட்ரைனிங் என்ற நடைமுறை பயிற்சி விரைவில் பள்ளிகளில் அமல் படுத்தப்படும் எனவும் அதன் மூலம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் வேலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்
12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், அமைதி பூங்காவாகவும் திகழ்கிறது என்று பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது, தமிழக அரசின் நீட் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களில் 1000 மனவர்களாவது நிச்சயம் மருத்துவம் பயில்வர்;பள்ளிக்கல்வித்துறை சார்பில் 26,000 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது;, இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews