தினமும் ஒரு திருக்குறள் பற்றி அறிவோம்: படம் மற்றும் தமிழறிஞர்களின் விளக்க உரைகளுடன்: 11/11/18 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

தினமும் ஒரு திருக்குறள் பற்றி அறிவோம்: படம் மற்றும் தமிழறிஞர்களின் விளக்க உரைகளுடன்: 11/11/18




ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

மணக்குடவர் உரை:
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.

தேவநேயப் பாவாணர் உரை:
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உழவர் ஏரின் உழார் - உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார். சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல் (Cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு. உழாஅர் என்பது இசைநிறை யளபெடை. குன்றியக்கால் என்பது குன்றிக்கால் எனக்குறைந்து நின்றது. குன்றுதல் இங்கு இன்மையாதல்.


கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்

சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

Translation
If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.

Explanation
f the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

Transliteration
Erin Uzhaaar Uzhavar Puyalennum Vaari Valangundrik Kaal


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews