டிச.1 முதல் 8 வரை "நெட்'(NET) தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 29, 2018

டிச.1 முதல் 8 வரை "நெட்'(NET) தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

டிச.1 முதல் 8 வரை அழகப்பா பல்கலை.யில் "நெட்' தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக் கழக மானியக்குழு மூலம் தேசிய தகுதித் தேர்வு டிசம்பர் 9 முதல் 23- ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வை நேஷனல் டெஸ்டிங்க் ஏஜென்சி நடத்துகிறது. இத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தாள்-1க்கு அழகப்பா பல்கலைக் கழகத் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் 1- ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படும்.
எனவே நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற விரும்பினால் அழகப்பா பல்கலைக் கழக பழனியப்பச்செட்டியார் நினைவரங்கத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்று பெயரை பதிவு செய்துகொள்ளலாம். 04565 - 223266 என்ற தொலைபேசியிலோ அல்லது 8870781897 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews