மெசெஞ்சரில்(Messenger) அன்செண்டு(Unsend) பட்டன்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 15, 2018

மெசெஞ்சரில்(Messenger) அன்செண்டு(Unsend) பட்டன்!

ஃபேஸ்புக் மெசெஞ்சரில் அன்செண்டு மெசெஜ் பட்டனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டெக்கிரன்ஞ்ச் கூறியுள்ளது. உலகின் மிகப்பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் புதுப்புது மாற்றங்கள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேஸ்புக் மெசெஞ்சர் செயலியும் அவ்வப்போது மாற்றங்களுடன் மேம்பாடு கண்டு வருகிறது. அந்தவகையில் இப்போது மெசெஞ்சரில் அன்செண்டு மெசெஜ் பட்டன் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் டெக்கிரன்ஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெசெஞ்சரில் அன்செண்டு மெசெஜ் பட்டன் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. வரவிருக்கும் மாதங்களில் இந்த வசதி அறிமுகமாகும்” என்று கூறப்பட்டுள்ளது. தற்போது மெசெஞ்சர் இன்பாக்ஸில் உள்ள செய்திகளை மட்டுமே அழிக்க இயலும். அப்படி அழிக்கும்போது அந்தச் செய்தி அனுப்பியவரிடமிருந்து மட்டுமே மறையும்.
குறிப்பிட்ட மெசெஜ்ஜை பெற்றவரிடமிருந்தும் அனுப்பியவரே அழிக்கும் வசதி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. வாட்ஸ் அப் செயலியில் மட்டும் அனுப்பிய செய்தியை அழிக்கும் வசதி இருக்கிறது. வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஒரு செய்தியை 1 மணி நேரத்தில் Delete for Everyone கொடுத்தால் அந்தச் செய்தி பெற்றவரிடமிருந்தும் மறைந்துவிடும். அதேபோல ஒரு வசதியை மெசெஞ்ஜரிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதை டெக்கிரன்ஞ்சின் ஜனே மன்ச்சுன் வோங் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews