நீட்' தேர்வு: பதிவு நாளை துவக்கம்! Click Here To Apply - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 31, 2018

நீட்' தேர்வு: பதிவு நாளை துவக்கம்! Click Here To Apply




பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை துவங்குகிறது. பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி

வந்தது.ஆனால், பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் காரணமாக, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ.,விடம், தேர்வு நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. என்.டி.ஏ., சார்பில், நீட் தேர்வுக்கான அட்டவணை, செப்., மாதமே அறிவிக்கப்பட்டது. 2019 மே, 5ல் நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வின் முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, தமிழ் உள்பட, 10க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நாளை துவங்க உள்ளது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம். நாடுமுழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்கு, 'ஆதார்' கட்டாயம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நீட் தேர்வு குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழி வினாத்தாள்களில், மொழிமாற்றம் உள்ளிட்ட பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும். அதன் அடிப்படையிலேயே திருத்தம் செய்யப்படும்' என, தெரிவித்துள்ளார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews