ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 07, 2018

ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம்

கடலுாரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை கண்டறியும் முகாம் நடந்தது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மைத் தன்மையை கண்டறியும் பணியை மாவட்டம் வாரியாக முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மேற்கொண்டு வருகிறது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எஸ்.எஸ்.எல்.சி., - பிளஸ் 2 பாட பிரிவு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 3,800 பேரின் மதிப்பெண் சான்றிதழ்கள் உண்மையானவை என, கண்டறிந்து ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டது.மீதமுள்ள 400 பேரின் மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையைக் கண்டறியும் சிறப்பு முகாம் கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதற்காக ஆசிரியர்கள், பணியாளர்கள் சான்றிதழ்களுடன் வந்தனர்.அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவெண், பிறந்த ஆண்டு, தேதியை, தேர்வுத் துறையின் ஆன்-லைன் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கடலுார் செல்வராஜ், வடலுார் திருமுருகன், விருத்தாசலம் செல்வகுமார், சிதம்பரம் ஆஷா கிறிஸ்டின் ஆகியோர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, உண்மையானவ என, சான்றிதழ் வழங்கப்பட்டது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

Total Pageviews