பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 19, 2018

பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவு

தமிழக அரசின், 'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி பணிக்கு வராத, ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு முடித்தவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தனியார் நிறுவனங்கள் உதவியுடன், தமிழகம் முழுவதும், 412 பள்ளிகளில், பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயிற்சி அளிக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டும், முழுமையாக பணிக்கு வருவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்களில் சிலர், சரியாக பணிக்கு வராமல், டிமிக்கி கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
கிராமப்புறங்களில், ஆசிரியர்கள் இன்றி, பெரும்பாலும், ஆன்லைன் வழியில் மட்டுமே, நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.இது குறித்து, மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தரப்பில் இருந்து, பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நீட் இலவச பயிற்சிக்கு மாற்று ஆசிரியர்களையாவது அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த பயிற்சி வகுப்புகளுக்கு முறையாக வராமல், ஓ.பி., அடித்த ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்கும்படி, மாவட்ட அதிகாரிகள் வழியாக, தலைமை ஆசிரி யர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews