அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க `விழுதுகள் அமைப்பு’! - முன்னாள் மாணவர்களின் முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 19, 2018

அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க `விழுதுகள் அமைப்பு’! - முன்னாள் மாணவர்களின் முயற்சி

அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ராமேஸ்வரம் அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினர் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1985-86-ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து 'விழுதுகள்' என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர் இந்த அமைப்பில் உள்ள மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் சிறப்பிடம் பிடிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளைச் சேர்ந்த முதல் 3 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுத்தொகை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இதற்கென இந்த மாணவர்கள் வங்கியில் நிரந்த வைப்புத் தொகையினையும் சேமித்து வைத்துள்ளனர்
ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட 'விழுதுகள்' அமைப்பின் சார்பில் 4-ம் ஆண்டாக ஊக்கப் பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது மத்திய புலனாய்வு பிரிவின் ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர் கோபால் இந்த விழாவுக்குத் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews