தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1884 பொது உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான (ஒப்பந்தகால அடிப்படையிலானது) அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Assistant Surgeon (General)
காலியிடங்கள்: 1884. இதில், 175 இடங்கள் பின்னடைவுப் பணியிடங்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 581 இடங்களும், பி.சி. பிரிவினருக்கு 497 இடங்களும், பி.சி.எம். பிரிவினருக்கு 66 இடங்களும், எம்.பி.சி. மற்றும் டி.சி. பிரிவினருக்கு 376 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 280 இடங்களும், எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 54 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.7.2018 -ஆம் தேதியின்படி பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், முன்னாள் படைவீரரான பொதுப்பிரிவினர் 48 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: UGC அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து மெட்ராஸ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு House Surgeon- ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56100 - 177500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரு ரூ.750, எஸ்.சி., எஸ்.சி.ஏ. எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.375 கட்டணமாக செலுத்த வேண்டும். வங்கிகளின் அட்டைகள் பயன்படுத்தி ஆன்லைனிலும் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.10.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 9.12.2018
மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2018