இந்த காலாண்டு விடுமுறைக்கு என்ன செய்யலாம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 24, 2018

Comments:0

இந்த காலாண்டு விடுமுறைக்கு என்ன செய்யலாம்?


(நீண்ட பயணங்கள் சாத்தியமில்லாத, உடனடியாக வெளியூர்களுக்கு சென்று வரமுடியாத இந்த ஒருவாரம் - பத்து நாள் வரையிலான இந்த விடுமுறையில் எப்படி ‘நினைவுகளை’ பரிசளிக்கலாம்) 1. ஒரு வண்டி எடுத்துக்கொண்டு குழந்தையுடன் சென்று கடைகளில் கிடைக்கும் பழைய சிறுவர் இதழ்கள் என்ன? எங்கெங்கு கிடைக்கின்றது என விசாரித்து, வாங்கிவரவும் 2. குழந்தைப் பாடல்களை (தமிழ்) குழந்தைகளுடன் மெட்டமைத்து பாடி விளையாடலாம் 3. வீட்டைச் சுற்றி நடந்து சென்று பத்து வகையான இலைகளை பறித்து வரச்சொல்லவும். கொண்டு வந்த இலைகளைக்கொண்டு அழகிய பொருள் ஏதேனும் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு இலை எந்த மரத்தில்/ செடியில் இருந்து வந்தது என கண்டுபிடிக்கலாம். 4. வழக்கமாக பள்ளிக்கு செல்லும் நாட்களில் விரைவில் உறங்க செய்துவிடுவோம். விடுமுறை நாளில் ஒன்பது மணிக்கு மொட்டைமாடிக்கு சென்று படுத்துக்கொண்டு எல்லோரும் வானை பார்க்கவேண்டும். நட்சத்திரங்களையும், நிலாவையும் பார்த்து ஒரு மணி நேரம் பேச வேண்டும். பேச்சு வானை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் (பின்குறிப்பு: இதனை மழை நாளில் முயற்சிக்க வேண்டாம், கம்பெனி பொறுப்பு ஏற்காது) 5. நகரில்/ஊரில் இருக்கும் அவர்களுடைய நண்பர்கள் வீட்டிற்கோ/ நம்முடைய நண்பர்கள் வீட்டிற்கு சென்று காலை முதல் மாலை வரையில் அங்கே கழிக்க விடலாம். மறுநாள் அவர்களை நம்வீட்டிற்கு வரவழைக்கலாம். 6.அருகே எங்கே நூலகம் இருக்கு என்பதை தேடி, அங்கே தினம் சில நிமிடங்கள் அவர்களை அங்கே செலவழிக்க செய்ய வைக்கலாம். தங்கள் நண்பர்களுடன் சென்றால் இன்னும் சில நிமிடங்கள் அதிகமாகவும் உற்சாகமாகவும் செலவழிப்பார்கள். 7.அருகே இருக்கும் நர்சரி சென்று அங்கே இருக்கும் பூக்களையும் செடிகளையும் நோட்டம்விடலாம். வீட்டில் எதனை வளர்க்க முடியுமோ அதனை வளர்க்க இந்த விடுமுறையில் துவங்கலாம் 8. சிறுவர்களுக்கான நல்ல உலக சினிமாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை டவுன்லோட் / சீடி வாங்கி குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக பார்க்கலாம். 9. வீட்டில் இருக்கும் புத்தகங்களை பட்டிலிட செய்யலாம். (புத்தகங்களை தொடுவார்கள், தலைப்புகளை பார்ப்பார்கள். புத்தகம் இல்லாதவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் என உணர்வீர்களாக) 10. ஒன்றாக சமைக்கலாம் 11. வீட்டின் அருகே இருக்கும் காய்கடைக்கு அனுப்பி, பட்டியலில் இருக்கும் காய்களையோ அவர்களுக்கு பிடித்தமான காய்களையோ வாங்கிவரச்சொல்லலாம், 12. அருகே இருக்கு காய்கறி சந்தை / சந்தைக்கு சென்று அங்கே என்னென்ன விற்கின்றார்கள் என்பதை மட்டும் பார்த்துவிட்டு வரலாம். மிகப்பெரிய பிரச்சனை இக்கால குழந்தைகள் உடனே ‘ஃபோர் அடிக்கின்றது’எனச் சொல்ல துவங்கிவிடுகின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் நாம் தான். காரணங்கள் பல. முடிந்த அளவிற்கு தொலைக்காட்சி முன்னரும், கணினி, மொபைலுடன் நேரம் செலவழிப்பதை குறைக்கலாம். கொஞ்சம் திட்டமிடலும் கொஞ்சம் நம் நேரமும் செலவிட்டால் இந்த குறுகிய விடுமுறையை நல்ல நினைவுகளாக மாற்றலாம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews