உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் 5,000 மாணவர்கள் உள்பட 10 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் எம். ராஜீவன் கூறினார்.
பொதுமக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே அறிவியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு லக்னெளவில் வரும் அக்டோபர் 5 முதல் 8 -ஆம் தேதி வரை இத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த அறிவியல் திருவிழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அக்டோபர் 6 -ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய புவி அறிவியல் துறையின் செயலர் ராஜீவன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்த ஆண்டு மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்தப்பட உள்ளது. இதில் 23 சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. 5000 மாணவர்கள் உள்பட 10,000 பிரதிநிதிகள், 550 ஆசிரியர்கள், வடகிழக்கு பகுதியில் இருந்து 200 மாணவர்கள், 20 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் 200 தொடக்கநிலை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து சுமார் 450 மாணவர்கள் பங்கேற்பார்கள். குறிப்பாக 800 பெண் அறிவியலாளர்கள், தொழில்முனைவோர் பங்கேற்க உள்ளனர்.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் இந்தியாவின் சிறப்புமிக்க பங்களிப்பை காட்சிப்படுத்தும் வகையில், பிரமாண்டமான அறிவியல் மற்றும் தொழில் கண்காட்சி திருவிழாவில் இடம்பெற உள்ளது என்றார் அவர்
Search This Blog
Wednesday, September 26, 2018
Comments:0
சர்வதேச அறிவியல் திருவிழா: அக்.5 -இல் லக்னெளவில் தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.