உலக வரலாற்றில் இன்று செப்டம்பர் 23 ( September 23 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 23, 2018

Comments:0

உலக வரலாற்றில் இன்று செப்டம்பர் 23 ( September 23 )



செப்டம்பர் 23 ( September 23 )
கிரிகோரியன் ஆண்டின் 266 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 267 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 99 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர்.
1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. [1]
1803 – இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் : அசாயே என்ற இடத்தில் பிரித்தானியாவுக்கும்
மராட்டியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்றது.
1821 – திரிப்பொலீத்சா நகரைக்
கிரேக்கர்கள் தாக்கி 30,000
துருக்கியரைக் கொன்றனர்.
1846 – நெப்டியூன் கோள்
பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும்
பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1868 – புவெர்ட்டோ ரிக்கோவில்
எசுப்பானிய ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சி ஆரம்பமானது.
1889 – நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1905 – நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப் பிரிவதற்கு உடன்பட்டன.
1932 – இப்னு சவூது தலைமையில்
சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.
1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் தவறுதலாக பிரித்தானியப் படைகள் மீது நேப்பாம் குண்டுகளை வீசினர். 17 பேர் கொல்லப்பட்டு 79 பேர் காயமடைந்தானர்.
1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.
1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின்
கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
1980 – பாடகர் பாப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியை பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் நடத்தினார்.
1983 – மட்டக்களப்பு சிறை உடைப்பு :
இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.
1983 – செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
1983 – கல்ஃப் ஏர் விமானம் குண்டு ஒன்றினால் தகர்க்கப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 117 பேரும் கொல்லப்பட்டனர்.
1986 – இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
2002 – மொசிலா பயர் பாக்சு இணைய உலாவி வெளிவந்தது.
2004 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்
கிமு 63 – அகஸ்ட்டஸ் , உரோமைப் பேரரசர் (இ. 14 )
1215 – குப்லாய் கான் , மொங்கோலியப் பேரரசர் (இ. 1294 )
1791 – யோகான் பிரான்சு என்கே , செருமானிய வானியலாளர் (இ.
1865 )
1851 – எல்லன் காயேசு , அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1930 )
1871 – பிரான்டிசேக் குப்கா , செக் நாட்டு ஓவியர் (இ. 1957 )
1882 – ஆல்பிரெடு ஆரிசன் ஜாய் , அமெரிக்க வானியலாளர் (இ. 1973 )
1895 – ஹரி சிங் , ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (இ. 1961 )
1900 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணத்தின் 1வது ஆயர் (இ.
1992 )
1908 – ராம்தாரி சிங் திங்கர் , இந்திக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1974 )
1917 – அசீமா சாட்டர்ஜி , இந்திய வேதியியலாளர் (இ. 2006 )
1923 – கு. அழகிரிசாமி , தமிழக எழுத்தாளர் (இ. 1970 )
1930 – ரே சார்ல்ஸ் , அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2004 )
1933 – மது , மலையாளத் திரைப்பட நடிகர்
1941 – நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர்
1957 – குமார் சானு , இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்
1962 – ஷோபா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1980 )
1971 – முயீன் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1982 – ரதி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1988 – டெல் போட்ரோ , அர்ச்செந்தீன டென்னிசு வீரர்

இறப்புகள்
1877 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1811 )
1939 – சிக்மண்ட் பிராய்ட் , ஆத்திரிய மருத்துவர் (பி. 1856 )
1951 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
1968 – பியட்ரல்சினாவின் பியோ , இத்தாலியப் புனிதர் (பி. 1887 )
1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா , இலங்கை-சிங்கள அரசியல்வாதி (பி. 1884 )
1973 – பாப்லோ நெருடா , நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் (பி. 1904 )
1974 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமத்தானத்தின் கடைசி அரசர் (பி. 1919 )
1995 – க. துரைரத்தினம் , இலங்கை அரசியல்வாதி (பி. 1930 )
1996 – மஞ்சு பாசினி , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1906 )
1996 – சில்க் ஸ்மிதா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1960 )
2011 – மன்சூர் அலி கான் பட்டோடி , இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1941 )
2012 – அஸ்வினி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1969 )
2015 – தயானந்த சரசுவதி , இந்திய ஆன்மிக குரு (பி. 1930)

சிறப்பு நாள்
பெரும் இனவழிப்பு நினைவு நாள் ( லித்துவேனியா)
தேசிய நாள் ( சவூதி அரேபியா )
ஆசிரியர் நாள் ( புரூணை )

வெளி இணைப்புகள்
பிபிசி : இந்த நாளில் http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/23

நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில் http://www.nytimes.com/learning/general/onthisday/20060923.html

கனடா இந்த நாளில் http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Sep&day=23

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews