தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி அதன் முடிவுகளை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.
சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் சமீபத்தில் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டது.
இவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்துள்ள செல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் இன்று (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இசேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். இச்சேவைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு இசேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044- 25300336, 044- 25300337 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.