மேல்நிலைப் பள்ளிகளில் சித்த மருத்துவப் பாடத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு மருத்துவ முறைகளில் மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழக்கத்தில் உள்ள சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மரபு வழி மருத்துவங்களைப் பாதுகாக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவர்களைக் கணக்கெடுத்துப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றினை வழங்க வேண்டும்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு பாடமாக இருந்த சித்த மருத்துவம் தற்போது இல்லை. எனவே, அந்தப் பாடத்தினை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.