சுற்றுலாத் துறையில்(Tourism) பணி புரிய ஆர்வமா? இதற்கு என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்கலாம்? அதற்கான வேலைவாய்ப்புகள் எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 12, 2018

Comments:0

சுற்றுலாத் துறையில்(Tourism) பணி புரிய ஆர்வமா? இதற்கு என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்கலாம்? அதற்கான வேலைவாய்ப்புகள் எப்படி?




நாடு முழுவதும் சுற்றுலாத்துறைக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் சுற்றுலாத்துறையை தேர்ந்தேடுத்து படிப்பவர்களுக்கு இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் வரவேற்புதான். பொதுவாக சுற்றுலா வருபவர்கள் யார்?

வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தினரும் தான். எனவே உள்நாட்டு மொழிகளைத் தவிர பிற மொழிகளை அறிந்திருப்பது கூடுதல் பலம்.

குறிப்பாக ஹிந்தி, பிரெஞ்சு, ஜப்பானிஸ் மொழியை அறிந்து கொள்ளவது மிக அவசியம். மேலும் சிறப்பான பேச்சுத் திறனைப் பெற்றிருப்பது கூடுதல் பலம்.

இது தவிர இந்திய கலாச்சாரம், வரலாறு மற்றும் புவியியல் போன்றவற்றிலும் நீங்கள் பணியாற்ற விரும்பும் ஊர் அல்லது பிரிவுகளில் உள்ள தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

படிப்புகள்: இளநிலை (பி.எஸ்சி, பிஏ), முதுநிலை (எம்.ஏ, எம்எஸ்சி) டிப்ளமோ போன்ற பிரிவுகளில் இந்த வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

தற்போது பல்வேறு தரப்பினர் எந்தவித கல்வியும் இன்றி சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து வருகின்றனர். நாம் குறிப்பிட்ட படிப்புகளை முறையாக முடிக்கும் பட்சத்தில் அரசு வழங்கும் பல்வேறு விதமான சலுகைகள், மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்தி நிச்சயம் இத்துறையில் சிறப்பாக ஜொலிக்க முடியும்.

வேலை வாய்ப்பு:
சுற்றுலாத் துறை: சுற்றலாத்துறையில் மார்க்கெட்டிங், டூர் பிளானர்ஸ் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற வேலைகள் உள்ளன.

வழிகாட்டியாக பணிபுரியும் நபர்கள் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் வழிகாட்டியாக பட்டியலிடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஏர்லைன்ஸ்: விமானத்துறையில், பைலட், பணிப்பெண், போன்ற வேலைகளைத் தவிர்த்து பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ஹோட்டல்: இதில் ஹவுஸ் கீப்பிங்கில் ஆரம்பித்து பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிவது வரை பல்வேறு வகையான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

டூர் ஆபரேட்டர்கள்: பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் புக் செய்வதில் இருந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கூட்டிச்சென்று மீண்டும் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பது வரை இவர்களின் பொறுப்பு. இதிலும் சிறப்பான முறையில் வருமானம் ஈட்டலாம்.

டிராவல் ஏஜென்ட்: சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பயண ஏற்பாடுகளை செய்ய உதவுகிறார்கள்.

டிரான்ஸ் போர்ட்: விமானம், ரயில் தவிர ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல கார், வேன், ஜீப், போன்ற வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதின் மூலம் எளிமையாக சம்பாதிக்கலாம்.

சுற்றுலா மற்றும் சுற்றுலா தொடர்பான படிப்புகளை வழங்கும் சில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள்:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் -தில்லி, குவாலியர், புவனேஸ்வர், நெல்லூர்

இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் - சிம்லா
கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் டிரான்ஸ்மிஷன் அண்ட் டிப்ளமோ ஸ்டடீஸ் - திருவனந்தபுரம்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் - ஹைதராபாத்

திப்ருகார் பல்கலைக்கழகம், சென்டர் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் (சிஎம்எஸ்) - திப்ருகார், அஸ்ஸாம்

இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் (லக்னோ பல்கலைக்கழகம்) - லக்னோ

இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (IMS) - காஜியாபாத்

ரிஜினல் காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் (RCM) - புபனேஷ்வர், ஒரிசா.

சம்பளம்:
இந்ததுறையில் சம்பளமானது ஏராளமான காரணிகளை சார்ந்திருக்கிறது. குறைந்த பட்சமாக மாதத்திற்கு ரூ.10-15 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். இதே அரசு வேலையாக இருந்தால் அரசு ஊதிய அட்டவணையை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews