தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட பின்னர், பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும், என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வு, ஜூன் 14 முதல் துவங்குகிறது .மாநில அளவில் 12,000க்கும் மேல் பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக (சர்பிளஸ்) ஆக உள்ளனர். எனவேபணிநிரவலுக்கு பின் பொதுமாறுதல் நடந்தால் சில காலி இடங்களே ஏற்படும்.
மேலும், பட்டதாரி ஆசிரியரில் இருந்து உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, இரண்டு ஆண்டுகளாக நீடித்த நீதிமன்ற தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 1200 ஆசிரியர், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறும்பட்சத்தில் பொது மாறுதலில் அந்த 1200 காலி இடங்களும் காண்பிக்கப்படும். இதுகுறித்து உயர், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறியதாவது: பணிநிரவலுக்கு பின் பதவி உயர்வு அளிக்கப்பட்டால் மீண்டும் 1200 காலி இடங்கள் ஏற்படும்.இந்த இடங்களை முறைகேடு மூலம் நிரப்ப வாய்ப்பு ஏற்படும்.
மேலும் இணை இயக்குனர் - முதன்மை கல்வி அலுவலர் - மாவட்ட கல்வி அலுவலர் என்ற வரிசையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட பின்னர், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தினால் மேலும் கூடுதல் காலியிடம் ஏற்படும். ஆனால் ஏனோ தலைகீழ் வரிசையில் கலந்தாய்வு நடக்கிறது, என்றார்.
அதிக 'உபரி'கள் ஏன்?
நடப்பாண்டு ஆசிரியர் - மாணவர் நிர்ணயம், சென்ற ஆண்டு (1.8.2017) படி நிர்ணயிக்கப்பட்டதால் தான், உபரி ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இந்தாண்டு மாணவர் சேர்க்கை முடிந்த பின், அதன் அடிப்படையில் உபரிஆசிரியர் கணக்கிட வேண்டும், என ஆசிரியர்சங்கங்கள் வலியுறுத்துகின்றன

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.