டெல்லி பல்கலைக்கழகம் நேற்று(ஜூன் 18) கட் ஆப் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பில் 95 சதவிகிதத்துக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும்படி கட் ஆப் மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கட் ஆப் மதிப்பெண் பட்டியலில் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பி.ஏ படிப்புக்கு 98.75 சதவிகித மதிப்பெண் கட் ஆப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும்,0.25 அல்லது 0.5 ஆகிய அளவிலேயே குறையும் அல்லது அதிகரிக்கும். ஆனால், இந்தாண்டில் 95 சதவிகிதத்துக்கும் மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர முடியும். 95 சதவிகிதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு சிபிஎஸ்இ மாணவர்கள் 12,737 பேர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். அதனால், கட் ஆப் மதிப்பெண் சற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 2,646 மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் எடுத்துள்ளனர் என ஏற்கனவே கல்லூரி முதல்வர்கள் தெரிவித்திருந்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 80 சதவிகிதம் பேர் சிபிஎஸ்இ மாணவர்கள். மீதமுள்ளவர்கள் தங்களின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள். மாணவர்கள் பொதுவாக பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் வணிகம்
டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிக கட் ஆப் மதிப்பெண் 98.75 சதவிகிதமாகும். டெல்லி கலை மற்றும் வணிக கல்லூரியில் இதழியல் படிப்பு, ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதார படிப்பு,ஆகியவற்றிற்கு கட் ஆப் மதிப்பெண் 98.50 சதவிகிதமாகும்.
பெரும்பாலான மாணவர்கள் பி.ஏ படிப்பைதான் தேர்ந்தெடுப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை ஸ்ரீராம் கல்லூரியில் ஐந்து சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 91 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த படிப்புக்கு 53 கல்லூரிகளில் 1,05,818 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ஹன்ஸ் ராஜ் கல்லூரியில் பொருளாதார படிப்புக்கான விண்ணப்பங்கள் 97.25 சதவிகிதத்திலிருந்து 98 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதுபோன்று, ஆங்கில இலக்கிய படிப்புக்கும் இந்தாண்டு 0.25 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டுக்கும்,இந்தாண்டுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களில் அந்த அளவுக்கு வேறுபாடு இல்லை என ஹன்ஸ் ராஜ் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் கல்லூரியில் வணிக பிரிவு படிப்புக்கு கடந்த ஆண்டு போலவே 97.75 சதவிகிதம் கட் ஆப் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பிரிவு படிப்புக்கு 97.75 சதவிகிதத்திலிருந்து 98.50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அறிவியல்
பெரும்பாலான கல்லூரிகளில் அறிவியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் அதே நிலையில்தான் இருக்கின்றன. ரம்ஜாஸ் கல்லூரியில் பிஎஸ்சி பிசிக்கல் சைன்ஸ் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டை விட 6 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதில், ஹிந்து கல்லூரி மற்றும் எஸ்.ஜி.டி.பி. கல்சா கல்லூரியில் இயற்பியல் படிப்புக்கான கட் ஆப் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாணவர்கள் 98 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.