கால்நடை மருத்துவம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 11, 2018

Comments:0

கால்நடை மருத்துவம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்




தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின்கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 7 கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்பு, பிடெக் உணவுத்தொழில்நுட்பம், கோழி உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் என மொத்தம் 400 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் ஜூன் 11ம் தேதி(இன்று) முடிவடைகிறது

இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன், தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரியில் ஜூன் 18ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர், வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள்/ வெளிநாடு வாழ் இந்தியரின் நிதி பெறுவோர், வெளிநாட்டினர் பிரிவின்கீழ் www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews