பாஜக அரசு மத்தியில் பதவியேற்று 4 ஆண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பல திட்ட பயனாளிகளிடம் உரையாடி வருகிறார்.
அதன்படி இன்று ஸ்டார்ட் அப் திட்டத்தில் பயனடைந்த தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி உரையாடினார். சிறிய கிராமங்களில் மட்டுமல்ல, மிகப்பெரிய நகரங்களிலும் ஸ்டார்ட் அப் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமையோடு பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி தனியார் பள்ளி மாணவிகளிடம் பிரதமர் மோடி உரையாடினார்.
மோடியிடம் மாணவிகள், தாங்கள் வடிவமைத்த சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட, நவீன நீர் பாசன இயந்திரம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், இந்த நவீன இயந்திரத்தை, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தூத்துக்குடி வரவேண்டும் என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். முதல் தமிழில் வணக்கம் என்று கூறிய மோடி தூத்துக்குடி வருவதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.