கியூ.எஸ். உலக பல்கலை. தரவரிசைப் பட்டியல்: முதல் 200 இடங்களில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள்: அதே இடத்தில் நீடிக்கும் சென்னை ஐஐடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 09, 2018

Comments:0

கியூ.எஸ். உலக பல்கலை. தரவரிசைப் பட்டியல்: முதல் 200 இடங்களில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள்: அதே இடத்தில் நீடிக்கும் சென்னை ஐஐடி



பிரபல கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி, தில்லி ஐஐடி ஆகியவை முதல் 200 இடங்களில் இடம் பிடித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், வேலூர் விஐடி உள்பட மொத்தம் 24 இந்திய கல்வி நிறுவனங்கள் இந்த முறை தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி ஊக்குவிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து, தரவரிசைப் பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டைப் போலவே அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி. (மஸாசஸ்டெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) முதலிடத்தையும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், ஹார்வர்ட் பல்கல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

மும்பை ஐஐடி, ஐஐஎஸ்சி முன்னேற்றம்: இந்தியக் கல்வி நிறுவனங்களில் மும்பை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. உலக தரவரிசைப் பட்டியலில் மும்பை ஐஐடி 162- ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 179-ஆவது இடத்தில் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐஐஎஸ்சி 170-ஆவது இடம் பிடித்துள்ளது; கடந்த முறை அது 190-ஆவது இடத்தில் இருந்தது. கடந்த முறை 172-ஆவது இடத்தில் இருந்த தில்லி ஐஐடி, இம்முறை அதே இடத்தில் தொடர்கிறது. 

அதே இடத்தில் சென்னை ஐஐடி: அதுபோல, கடந்த முறை 264-ஆவது இடத்தில் இருந்த சென்னை ஐஐடி, இந்த ஆண்டும் அதே இடத்தில் நீடிக்கிறது. கடந்த முறை 293-ஆவது இடத்திலிருந்த கான்பூர் ஐஐடி இம்முறை 283 ஆவது இடமும், 308-ஆவது இடத்திலிருந்த காரக்பூர் ஐஐடி 295-ஆவது இடமும் பிடித்து முன்னேற்றம் கண்டுள்ளன. 

அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பின்னடைவு: கடந்த ஆண்டு 651 முதல் 700 ரேங்க் வரையிலான பட்டியலில் இடம்பெற்றிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 751 முதல் 800 ரேங்க் வரையிலான பட்டியலில் இடம்பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. மேலும், ஐஐடி ரூர்கி, ஐஐடி குவாஹாட்டி, தில்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews