டி.என்.பி.எஸ்.சி நடத்திய பொறியாளர் பணிக்கான தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் தேர்வு எழுதியோர் கடும் குழப்பம் அடைந்தனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான அரசு தேர்வு நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் SSKV ஆண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மின்னியல் பாடப்பிரிவுக்கு பதிலாக, மின்னணு தொடர்பியல் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.இதனால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த மாணவர்கள் தேர்வு மையத்திலிருந்த கண்காணிப்பாளர்களிடம் முறையிட்டனர்.ஆனால் வினாத்தாள்களை மாற்றி வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். தேர்வு முடிந்ததும் வெளியே வந்த பிறகு தான் வினாத்தாள் தவறுதலாக கொடுக்கப்பட்டது உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது செய்வதறியாது திகைத்துள்ளனர்.
வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.