'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 17, 2018

Comments:0

'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து!!!


பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு முடிவில், இரண்டாம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. புதிய மாற்றம் : எந்த பள்ளியும், தங்கள் பள்ளியின், 'டாப்பர்' அல்லது முதல் மூன்று இடம் என, எந்த தனிப்பட்ட மாணவரையும் குறிப்பிட்டு, விளம்பரம் செய்யக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் பட்டியலும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு முதல், மற்றொரு புதிய மாற்றத்தையும், அரசு தேர்வுத் துறை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' மதிப்பெண் பட்டியல், முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பகுப்பாய்வு பட்டியலில், சென்டம் எடுத்த மாணவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவின்படி, 'சென்டம்' வழங்கும் முறையும், இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, பள்ளிக்கல்வி செயலராக, சபிதா இருந்த போது, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல், மற்ற முக்கிய பாடங்களுக்கும், 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற போட்டி : 'தவிர்க்க முடியாத நிலையில், தேர்வில் மிக தெளிவாக விடைகளை எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே, சென்டம் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மிக சிலர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளதால், சென்டம் பட்டியல் வெளியிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: உயர்கல்வியில் மாணவர்கள் சேர, பிளஸ் 2வில், 50 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண்களை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது; 'டாப்பர்' ஆக வந்தவர் யார்; சென்டம் எடுத்தவர்கள் யார் என, தனியாக கல்வித்தகுதி கிடையாது.'டாப்பர்' மற்றும் சென்டம் முறையால், மாணவர்களிடம் விரக்தி மற்றும் ஆரோக்கியமற்ற போட்டி ஏற்படுகிறது. இதை மாற்றும் வகையில், டாப்பர் மற்றும் சென்டம் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews