தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை கணினி அறிவியல் என்ற பெயரில் இருந்த ஒரே பாடம், அவர்கள் பயிலும் துறைகளுக்கு ஏற்ப மூன்று பிரிவுகளாகத் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் என்ற பெயரில் ஒரே பாடம் மட்டும் இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில், அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் பாடம் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் என்ற பொதுவான பாடம் மட்டுமே இருந்ததால், கலைப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்குக் கடினமானதாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அவர்கள் படிக்கும் துறைக்கு ஏற்ப தற்போது மூன்று பிரிவுகளாக மாற்றி வகுக்கப்பட்டுள்ளன. இதில், அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் என்ற பெயரிலும், கலைப் பிரிவு மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் என்றும், வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு ஏதுவாக டேலி அடங்கிய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் எனும் கணினிப் பயன்பாடுகள் என்றும் அந்தப் பாடம் வகைப்படுத்தப்படுகிறது.
இதேபோன்று, வொகேஷனல் எனும் தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு கணினித் தொழில்நுட்பம் எனப் பாடம் மூன்று ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அடுத்த கல்வி ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
1, 6, 9, 11 ஆகிய வகுப்புப் பாட நூல்கள் மே 31இல் வெளியிடப்படும் எனப் பாடநூல் வலைதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
More Details Click Here
Subject ok computer science teacher posting varumaaa
ReplyDeleteSubject ok computer science teacher posting eppo than varum
ReplyDeleteSubject ok computer science teacher posting eppo than varum
ReplyDelete