பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 2 கடைசி நாளாகும்
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி
கடந்த மார்ச் -ஏப்ரலில் நடைபெற்ற பிளஸ் -2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, ஜூன் 25 -ஆம் தேதி முதல் ஜூலை 4 -ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது
இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
.Kaninikkalvi.
இதற்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 2 கடைசி நாளாகும். தனியார் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வுக் கட்டணம்
இந்த சிறப்பு துணைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 50 வீதமும், இதர கட்டணமாக ரூ. 35 சேர்த்தும் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்
தேர்வறை அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். அந்த அனுமதிச் சீட்டில் தேர்வு மைய விவரம் இடம்பெற்றிருக்கும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை
ஜூன் 25 - மொழிப் பாடம் தாள் -1
ஜூன் 26 - மொழிப் பாடம் தாள் -2
ஜூன் 27 - ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 28 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 29 - வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
ஜூன் 30 - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, வணிகவியல், செவிலியர் (தொழில் பிரிவு), செவிலியர் (பொது), ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் செயல்பாடுகள், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு.
ஜூலை 2 - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்டு மொழிப் பாடம் (தமிழ்), மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல்.
ஜூலை 3 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்காய்வு, அலுவலக மேலாண்மை.
ஜூலை 4 - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரப் பணியாளர், மின்னணுவியல் உபகரணங்கள், கட்டட வரைபடளாளர், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தானியங்கி இயந்திரங்கள், ஜவுளி தொழில்நுட்பம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.