பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.1% பேர் தேர்ச்சி...வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்
பிளஸ் 2 தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.4% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்
http://kaninikkalvi.blogspot.in
*இயற்பியல்- 96.4%
*வேதியியல்- 95.0%
*கணிதம்- 96.1%
*உயிரியியல்- 96.34
*விலங்கியல்- 91.9%
*தாவரவியல்- 93.9%
*வணிகவியல்- 90.30%
*கணக்குபதிவியல்- 91%
*கணினி அறிவியல்- 96.1%
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 231 மாணவர்கள் 1,180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
இதில் 50 மாணவர்கள் மற்றும் 181 மாணவிகள் 1,180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1,151-1,180 மணிப்பெண்களை 4,847 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 1,126-1,150 மதிப்பெண்களை 8,510 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.
htpp://kaninikkalvi.blogspot.in
1,101-1,125 மதிப்பெண்களை 11,739 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 1,001-1,100 மதிப்பெண்களை 71,368 மாணவி, மாணவிகள் பெற்றுள்ளனர்.
901-1,000 மதிப்பெண்களை 1,07,266 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 801-900 மதிப்பெண்களை 1,43,110 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.
701-800 மதிப்பெண்களை 1,65,425 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். 700 மற்றும் அதற்கு கீழே 3,47,938 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்
விருதுநகர் முதலிடம்
பிளஸ் 2 தேர்வில் 97% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது
📗ஈரோடு - 96.3%
📗திருப்பூர் - 96.1%
📗ஜூன் 25-ல் மறுதேர்வு
தேர்வுக்கு வருகை தராதவர்கள் ஜூன் 25-ல் மறுதேர்வு எழுதலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது
📗பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிந்தது
இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6903 பள்ளிகளில் மூலம் 8 லட்சத்து 66 ஆ்யிரத்து 934 மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதினர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 47 ஆயிரத்து 664 பேர் எழுதினர். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 42 ஆயிரத்து 290 பேர் எழுதினர். கலைப்பாடத் தொகுதியில் 14 ஆயிரத்து 228 பேர் எழுதினர்
சென்னையில் 50 ஆயிரத்து 584 பேரும், புதுச்சேரியில் 15 ஆயிரத்து 142 பேரும் எழுதினர். மேற்கண்ட தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 2794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு தேர்வில் 9 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர்
மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்க ரேங்க் முறை என்பது கடந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டும் ரேங்க் முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியாகாது
அதேநேரத்தில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அல்லது சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது
மாநில அளவில் முதல் 3 இடங்களை ரத்து செய்தாலும் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1171 பேர் 1180க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1151 முதல் 1180 வரை 12,283 பேர் மதிப்ெபண் பெற்றிருந்தனர்
தேர்வு முடிவுகளை வழக்கமாக சென்னையில் உள்ள தேர்வுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 9.30 மணிக்கு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிடுவார்
அதற்கு பிறகு அந்தந்த பள்ளியில் காலை 10 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தகவல் பலகையில் ஒட்டுவார்கள்
ஆனால், இந்த ஆண்டு காலை 9.30 மணிக்கு பள்ளிகளில் தேர்வு முடிவுகள் ஒட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளிலேயே மாணவர்களின் மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது
இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளின் புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு பட்டியல் தேர்வுத்துறை இணைய தளத்தில் மட்டுமே வெளியிட தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதனால் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம்
இது தவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தாங்கள் கொடுத்துள்ள செல்போன் எண்களிலும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்
📚தற்காலிக மதிப்பெண் பட்டியல்
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளி அல்லது மையத்தில் 21ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
📚விடைத்தாள் நகல், மறுகூட்டல்
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
விடைத்தாள் நகல் தேவையா, மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை மாணவர்கள் முன்கூட்டியே தெளிவாக முடிவு செய்து அதற்கு பிறகு விண்ணப்பிக்க வேண்டும்
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் நபர், அதே பாடத்துக்கு மதிப்பெண் மறு கூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடாது
விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். கட்டணம்: பகுதி1 (மொழி) ரூ.550, பகுதி 2 (ஆங்கிலம்) ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275, என விடைத்தாள் நகல் பெற கட்டணம் செலுத்த வேண்டும்
மறு கூட்டல் செய்ய பகுதி 1, பகுதி 2 மற்றும் உயிரியல் பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணங்கள் விண்ணப்பிக்கும் பள்ளியில் பணமாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீது எண்ணைக் கொண்டு விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய முடியும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.