தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே இடம் பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, கவர்னர் விசாரணை நடத்த, பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சை : உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படுகிறது. அதனால், தமிழக அரசின், செட் தேர்வில், அதிக பட்டதாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான, செட் தேர்வு, மார்ச், 4ல், மாநிலம் முழுவதும் நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சர்ச்சை எழுந்துள்ளது.
சந்தேகம் : மொத்தம், 50 கேள்விகளில், புதிதாக, ஏழு கேள்விகள் மட்டுமே இடம் பெற்றன; 43 கேள்விகள் முந்தைய ஆண்டுகளின், நெட் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றவை என்ற, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. நெட் தேர்வில், 2012 மற்றும், 2013ம் ஆண்டு வினாத்தாள்களில், தலா, 13; 2014ம் ஆண்டு வினாத்தாளில், ஏழு; 2016ம் ஆண்டு வினாத்தாளில், 10 கேள்விகள் என, மொத்தம், 43 கேள்விகள் பழைய வினாத்தாள்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலை, நெட், செட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுஉள்ளது.உயர்கல்வியில், ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக உயர்கல்வித் துறை நடத்திய, செட் தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகள் இடம் பெற்றதில், முறைகேடு பின்னணி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணை : இது குறித்து, விசாரணை நடத்துமாறு, கவர்னர், பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் அளிக்க உள்ளதாக, நெட், செட் சங்கத்தின் ஆலோசகர், பேராசிரியர், நாகராஜன் தெரிவித்தார்.
More News Click Here
More News Click Here
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.