உலகிலேயே மிகச்சிறிய கணினியை வெளியிட்ட IBM.. உப்புத் தூள் அளவுதான் இருக்கும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 21, 2018

Comments:0

உலகிலேயே மிகச்சிறிய கணினியை வெளியிட்ட IBM.. உப்புத் தூள் அளவுதான் இருக்கும்!




நியூயார்க்: ஐபிஎம் நிறுவனம் ''உப்புத் தூள்'' அளவில் இருக்கும், உலகிலேயே சிறிய கணினியை கண்டுபிடித்து இருக்கிறது.
அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் இரண்டு நாட்கள் முன்பு இந்த கணினியை அறிமுகப்படுத்தியது. இதை உருவாக்க மொத்தம் 5 வருடம் ஆனதாக ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தற்போது எதிர்பார்த்தது போலவே இயங்குவதாக கூறியுள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
எப்படி இருக்கும் 
என்ன அளவு
சிறிய உப்புத்தூள் அளவில்தான் இந்த கணினி இருக்கும். சிலரால் இந்த கணினியை கண்ணால் பார்க்க முடியவில்லை என்கிறார்கள். இதனால் மைக்ரோஸ்கோப் கொண்டு பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அளவு 1 மில்லி மீட்டர் அகலம் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.


எப்படி செயல்படும் 
செயல்பாடு எப்படி
இதில் 1000க்கும் அதிகமான சிறிய சிறிய சிப்புகள் இருக்கிறது. எல்லா சிப்புகளும் நேனோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நவீன ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சார்ஜ் ஏற்ற, வயர்லெஸ் டெக்னலாஜி பயன்படுத்தப்படுகிறது.


உதவும் 
பயன்
இதன் மூலம் தற்போது இருக்கும் கணினிகளில் செய்ய கூடிய எல்லா விஷயங்களையும் செய்ய முடியாது. ஆனால் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் வந்த விண்டோஸ் எக்ஸ் பி மாடல் கணினிகளில் செய்ய கூடிய விஷயங்களை செய்ய முடியும். அதேபோல் பாதுகாப்பு சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த கணினி அதிகம் உதவும்.


விலை 
விலை என்ன
இதன் விலை இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் ரூபாய்க்கு மிகவும் சிறிய கணினியை விற்பது பெரிய உலக சாதனை என்று டெக் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews