தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 05, 2018

Comments:0

தமிழக கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது: மத்திய அரசு தகவல்



தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.


(☆TRB Annual Planner -2018ல் கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு வராததற்கு காரணம்(Click Here To Know)


தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான், தமிழகத்திலுள்ள அரசின் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், முதல்கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அது மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதமே. இதற்காக சுமார் 100 மாணவர் எண்ணிக்கையுள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

இதனால் ஒன்றியத்திற்கு 3 லிருந்து 8 பள்ளிகள் வரை தேர்வு செய்யப்படும்.இந்த நடைமுறையால் அடுத்த கல்வியாண்டில், ஸ்மார்ட் வகுப்புகள் இல்லாத பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, அடிப்படை கல்வியே குறையும் வாய்ப்பு உருவாகிவிடும்.

இதனால் பாதிப்பில்லாத முறையில் ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகப்படுத்தும் கால அட்டவணையை உருவாக்க, அரசு முன் வரவேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்களின் கவலை ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் கிராமப்புறங்களில் 36.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கேரளாவில் 70.19%, புதுச்சேரியில் 99.74% கிராமப்புற பள்ளிகளில் கணினிகள் உள்ளன என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

நடப்பதையெல்லாம் பார்த்தால் அஸ்திவாரமே போடாமல் கட்டிடம் எழுப்ப அரசு முயற்சிப்பதாக பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews