அண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 1.33 லட்சம் மாணவர்களுக்கு மொபைல் போனில், 'ரிசல்ட்' அனுப்பப்படுகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பரில் நடந்தது. இந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பல்கலையின் தேர்வுத்துறையில், மாணவர்களின் மொபைல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மொபைல் எண்களுக்கு, மாணவர்களின் தேர்வு முடிவுகள், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா தெரிவித்துள்ளார். 'எந்தெந்த கல்லுாரிகள் சார்பில், தேர்வு கட்டணம் செலுத்தவில்லையோ, அந்த கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
Search This Blog
Monday, February 05, 2018
Comments:0
இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.